பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

அங்கே கார் ஓட்ட லைசென்சு வாங்குவது எளிதல்ல; நிறைய பயிற்சி பெறவேண்டும்; விதி முறைகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பயிற்சி பெறவே நிறைய செலவு செய்ய வேண்டும். மிகவும் கண்டிப்பான பேர்வழிகள், இங்கே நம்மீது நம்பிக்கை அதிகம் லைசென்சு கொடுத்துவிட்டால் பின் தானாகப் பயிற்சி கொள்வார்கள் என்ற நம்பிக்கை. எது சரி என்று எப்படி நாம் சொல்லமுடியும். இரண்டு பேரும்தான் பின்னால் கார்களைச் சரியாக ஓட்டுகிறார்கள். அங்கே ஒரு தொல்லை கார்கள் வேகமாக ஓட்டவேண்டும்; நாம் நகரங்களிலேயே முப்பது மைலுக்கு மேல் போகக்கூடாது என்பது விதி; வேகம் தவிர்ப்பது இங்குத் தேவைப்படுகிறது. ஏனென்றால் கார்கள் மட்டும் நடு ரோட்டில் போவது இல்லை; மனிதர்களும் நடக்கிறார்கள். மாடுகளும் தைரியமாக அசையாமல் நிற்கின்றன. மனிதர்களும் பயப்படுவது இல்லை. மாடுகள் பழகிவிட்டன. இந்தச் சிக்கல்கள் அங்கு இல்லை.

புதுக்கவிதை ஒன்று

“மண்ணெண்ணெய்க்கு இந்த நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறது. ஏன் தெரியுமா? மருமகள் ஸ்தானத்துக்கு வரும் பெண்கள் அதைப் பதுக்கி வைப்பதால் தான்” இப்படி எழுதினால் அது ஒரு புதுக்கவிதை. அதாவது மாமியின் கொடுமையால், கணவனின் காட்டுமிராண்டித்தனத்தால், அந்த வீட்டுக்கு அவள் புதியவளாகவே கருதப்படுவதால் அவள் அந்த வீட்டிற்கு வேண்டாதவள் ஆகிறாள்.

இறந்த பிறகு கொள்ளி வைப்பது நம் நாட்டுட்டு பழங்கால மரபு; அது தேவையற்ற சடங்காக மாற்றிக் கொள்ளத் தனக்குத்தானே கொள்ளி வைத்துக்கொள்ள இந்தப் புதுமைப் பெண். வேள்வி யாகத்தில் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். அதற்கு அவளுக்குச் சுலபமாகக் கிடைக்-