பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

யில் அவர்கள் மொழியும் பிரான்சில் அவர்கள் மொழியும் இயங்குகின்றது. எனினும் ஆங்கிலம் ஐரோப்பா முழுவதும் அறியப்படும் மொழி.

பாரத தேசத்தில் மொழி ஒரு பிரச்சனையாக அமைந்து விட்டது. நம்மை ஒன்றுபடுத்தி அறிவிற்கும் ஆக்கத்திற்கும் முன்னேறச் செய்த அரிய சாதனை ஆங்கில மொழியைச் சார்ந்தது. அதன் இடத்தை இந்தி மொழி பிடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு ஆங்கிலத்தை இழுத்துப்பிடிக்க முயற்சி நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலத்தைக் கைவிட முடியாது; பாரத நாடும் ஆங்கிலத்தைக் கைவிட்டால் நம் வளர்ச்சி குன்றுவது உறுதி. இருநூறு ஆண்டுகளாக நம் பல்கலைக் கழகங்களும் கல்வி நிறுவனங்களும் வளர்த்த ஆங்கிலத்தை விட்டுவிட்டால் நாம் ஒதுக்கப்பட்டவர்கள் ஆவது உறுதி. பிரதேச மொழிகளில் அந்தக் கருத்துக்களைச் சொல்ல முயல்வது வளர்ச்சியின் அறிகுறிதான், அதே சமயத்தில் ஒரு சிறந்த சாதனையை இழப்பதும் ஒரு பெரிய இழப்பாகும். மேல் மட்டக் குடும்பங்கள் இன்று ஆங்கிலத்தில் கல்வியறிவும் பேச்சு அறிவும் வளர்த்துக்கொண்டு வருகின்றன, அதே போக்கில் ஏனைய குடும்பங்களும் போட்டியிட்டு இயங்கிவருவதால் இன்று ஆங்கில போதனா மொழிகள் உடைய தனியார் கல்வி நிறுவனங்கள் இங்குப் பெருகிவருகின்றன.

இன்று இங்கு மொழிப் பிரச்சனை ஓர் அரசியல் பிரச்சனையாகிவிட்டது. பெரும்பான்மை பேச்சு மொழியாகிய இந்தி இன்று இந்தியப் பொதுமொழியாக்கும் திட்டம் செயல்பட்டு வருகின்றது. அதை நாம் தடுக்க முடியாது. வட நாடு முழுவதும் இதனை அங்கீகரித்துவிட்டார்கள். ஏனைய தென்னிந்திய மொழிகள் இந்தி மொழிக் கல்வி பெற்று வருகிறார்கள். நாமும் அந்த அளவில் மொழிக்