பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கின்றனர். தாமும் விலக்குக் கோரி விவாகரத்துப் பெறுகின்றனர். அது எளிய சாதனைதான். அடுத்த கட்டம் சமூகத்தில் இதற்குப் பொதுவான அங்கீகாரம் இல்லாததால் அவள் மறுமணம் செய்து கொள்வது எளிதாக இயல்வது இல்லை. ‘மணமகன் தேவை’ என்று விளம்பரப்படுத்தலாம். ‘விவாகரத்து பெற்றவர்’ என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டால் அவன் அதை அவளுக்கு அளிக்கும் வாழ்வுப் பிச்சையாக நினைக்கிறான்; அவன் தன்னை ஒரு அவதார புருஷன் என்று உயர்த்திக் கொள்கிறான்.

நம் பெண்களுக்கும் விவாகரத்துக்கு உரிமை இருக்கிறது; மறுக்கப்படவில்லை; மறுவாழ்வுக்கு வழிவகை அவ்வளவு பசுமையாக இருப்பதாகத் தெரியவில்லை. விதலைக்கு நெற்றியில் சிவப்பு நிறம் தீட்டத் துணியும் வாலிபன் இவள் முகத்தில் மலர்ச்சியைக் கூட்ட முன் வருவது இல்லை. ஏன் அவள் முந்தைய கணவன் உயிரோடு இருப்பதால்.

இந்த உரிமை என்பது கத்தி முனையில் நடப்பது போன்றது; கலியாணம் ஆவதற்கு முன்னால் கொஞ்சம் அடக்கம் காட்டவேண்டும். அது அவசியமாகிறது . ஏனென்றால் பெண்ணைத் தேடும் படலத்தில் அவளிடம் அடக்கம் முதலில் எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவத்தால் சொல்கிறேன். படித்தவள்; மேல் நாட்டுச் சாயல் படிந்தவள்; பட்டம் பல பெற்றவள்; அழகும், அவளின் பெற்றோர்கள் அவளுக்குத் தந்திருக்கிறார்கள். அவள் அப்பா அவளைப் பற்றி அறிமுகப்படுத்தப்படும்போது, “பெண் சுதந்திரப்பிரியள், அடக்கம் என்பது அவளிடம் அடங்கிய பண்பு; ரொம்பவும் நவீனப் போக்கு உடை யவள்” என்று சொல்லி அறிமுகப்படுத்துகிறார்.