பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

காரணமான தடைகள் அடுத்த பிறவியில் இருவரும் சந்திக்கும்போது நீங்கிவிடும் என்ற நம்பிக்கையில் உயிர் விடுபவர்களும் உண்டு. அவர்கள் எழுதும் வாசகங்கள் விசித்திரங்களாக இருக்கும். வாழ்வில் இணையமுடியாத நாங்கள் சாவில் சங்கமம் ஆகிறோம் என்று கடற்கரை அலைகளுக்கு வேலை கொடுப்பவர்களும் உண்டு. காதற் காவியங்களில் மனம் பறிகொடுக்கும் மனப்பக்குவம் மிகுதியாக இருப்பதால் இதைப் போன்ற வேகமான நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு.

முன்னும் பின்னும்

மண்ணின் பெருமையை விளக்கும் சுதந்திரப் போரை விளக்கும் சந்தனத்தேவன் கதை; சந்தனத் தேவன் சுதந்திரத்துக்காகப் போராடித் தூக்குமேடை ஏறி நிற்கிறான்; சுதந்திரப் பிரகடனம் அவனை மூச்சுவிடச் செய்கிறது. இந்த மண்ணில் சுதந்திரத்திற்குப் பிறகு அவன் மகன் எப்படி மாறுகிறான்; கள்ளக் கடத்தல் செய்து சமூக விரோதியாக மாறுகிறான்; அப்பா மகனைப் பார்த்துச் சொல்கிற வாசகம் நெஞ்சைத் தொடுகிறது.

“நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடினோம், சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டோம்” என்று சொல்கிறான்.

இது ஓர் உருவகம்; நாம் எப்படி எப்படி மாறி வருகிறோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு; இன்றைய இளைஞர்களுக்குக் கடந்த காலத்தைப் போன்ற உயர்ந்த லட்சியங்கள் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது; அன்று அந்த லட்சியம் தேவைப்பட்டு விடுதலை தவறிக் கேட்டு நிலை குலைந்த நிலையில் ஒரு உத்வேகம் ஏற்பட்டுச் செயற்-