பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அவர்களைப் போல நாமும் முன்னேற வேண்டுமென்று வேகமாக இயங்கி எந்திரங்களை உற்பத்தி செய்ய முயல்கிறோம்; வேகம் கிடைக்கும்; மனித மூளைக்கு வேலை குறைவாகும். விளைவு இங்கு ‘தொழில் இல்லை’ என்ற நிலை ஏற்பட்டு அதனால் வாழ்வு பாதிப்புக்கு உள்ளாவது உறுதி.

நாமும் நம் தேவைகளை அவர்களைப்போல் பெருக்கிக் கொள்கிறோம். வசதிகளை மிகுதிப்படுத்திக் கொண்டு வாழத் தொடங்குகிறோம். அதனால் அவற்றோடு பற்றாக்குறை அதிகம் ஆகிவருகிறது.

மேல் நாடுகளில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடியோக்கள் நிறைய இறக்குமதி செய்யப்படுகின்றன: அதனால் அவர்களுக்கு வாணிபம் தொழில் வளர்கிறது; நம் பணம் அங்கு ஏற்றுமதி ஆகிறது. இந்த நிலைகள் மாறுமளவிற்கு நம் நாட்டில் தொழில் நுட்பம் பெருகவேண்டும். அந்த முயற்சிகள் நடைபெறுகின்றன.

இன்று ‘கம்ப்யூட்டர் சைன்ஸ்’ என்று சொல்லி வெளிநாடுகளிலிருந்து எந்திரக் கருவிகள் வரவழைக்கப்படுகின்றன. துரிதமாக வேலைகள் நடைபெறுகின்றன. இவற்றை விலை கொடுத்து வாங்க நம் நாட்டுப் பணம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகிறது, மேலும் பல தொழிலாளர்களுக்கு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் குறைகிறது, அதனால் விளையும் தீமைகள் ஏராளம்.

இங்கே நம் சமூக நிலையில் இரண்டு பெரிய நிலைகள் உள்ளன; வசதி படைத்தவர்கள் ஒருசிலர்; அற்றவர் பலர். மேல் நாட்டிலும் அநேகமாக எல்லோரும் தொலைக்காட்சி, கார்கள், விடியோக்கள், இசைப் பதிவுத் தட்டுகள்; வானொலிச் சாதனங்கள் பெற்று வசதிகளைப் பெருக்கிக்