பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

இங்கே நமக்கு இவை புதியவை. நம் கோயிற் கோபுரங்களில் ஒரு சில சிற்பங்கள் இத்தகைய மனோநிலைச் சித்திரங்களைத் தீட்டியுள்ளன என்பது மறுக்கமுடியாது . ஏதோ சில கோயில்களில் இந்த அபூர்வக் காட்சிகள் இடம் பெற்றுத்தான் உள்ளன. மனித உணர்வுகளில் பால் உணர்வு வலிமை மிக்கது; இயல்பானது; அதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அந்த உரிமை அங்கீகாரம் இங்கே நடைமுறை யில் இல்லாததால் இலை தடை செய்யப்படுகின்றன; ‘ஆபாசக் காட்சிகள்’ என்று முத்திரை இடப்பட்டுக் குற்றவியல்களாகக் கருதப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பகிரங்கமாக இவை அனுமதிக்கப்படவில்லை என்பதால் இப்படங்கள் நம் நாட்டில் எட்டிப் பார்ப்பது இல்லை என்று கூற முடியாது. இது தடைப்படுத்தப்பட்ட ஒன்று; சமூகவியல் இதற்கு அங்கீகாரம் தராதவரை தடைகள் இருப்பது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான், சமூகவியலை ஒட்டித்தான் சட்டவியலும் செயல்படுகிறது.

முதியோரின் அவல நிலை

‘பாலும் தேனும் பாயும் நாடு’ அது என்று பார்த்த அளவில் கூற முடிந்தது; மனிதர்கள் சுதந்திரப் பிரியர்கள்; யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வயது வந்ததும் வாலிப முறுக்கு அது செய்யும் கிறுக்கின் பயனாக ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. அவர்கள் எதையும் தொடர்கதையாக்குவதில்லை. பேரன் வேண்டும் என்பதற்காக மகன் செய்யும் தவச் செயல் அல்ல அவன் பெறும் சின்னஞ் சிறுசுகள், பாட்டி கற்ற கதைகள், வாழ்ந்த வரலாறுகள், மடியில் அமரும் பேரன் பேர்த்திக்குச் சொல்லும் வாய்ப்புகள் அங்கு இல்லை. இங்கு அவ்வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை ஒரு தொடர் சங்கிலி.

‘எல்லாம் பொய்யாய்க் கனவாய் மெல்ல மெல்லப் போனதுவே’ என்பது போலக் கடந்த கால வாழ்வின்