பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

நாட்டில் அறவே நீக்கப்பட்டுவிட்டன. அரசாங்கம் முழுப்பொறுப்பேற்று மக்களின் நல்வாழ்வுக்குக் காப்பு அளிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மருத்துவமனைகள் இயங்குகின்றன. அவை தனியார் மருத்துவமனை போன்ற அமைப்பை உடையன. அதில் நான்கு அல்லது ஐந்துபேர் கூட்டாகச் சேர்ந்து நடத்துகின்றனர். அது அவர்கள் அரசாங்கப் பொருள் உதவி பெற்று இயக்கி வருகிறார்கள். அதற்கு ‘சிகிச்சை அகம்’ (Surgery) என்று பெயர். ஒவ்வொரு வைத்தியரின் கீழ் சுமார் இரண்டாயிரம் பேர் பதிவு செய்யப்படுகின்றனர். ஒரு சிகிச்சை அகத்தில் பத்தாயிரம் பேர் புதிவு பெறுகின்றனர், அவர்களின் உடல் நலப் பாதுகாப்பு இந்தச் சிகிச்சை அகத்தைச் சார்ந்தது.

காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை அங்கு நேரில் சென்று நோயாளிகள் மருத்துவ உதவி பெறுகின்றனர். இதுமட்டுமல்ல. அவர்கள் வீட்டுக்கும் இவர்கள் அழைப்பின் பேரில் செல்லவேண்டும். தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரை அழைப்பார்கள். அவர்கள் இல்லங்களுக்கு இரவு எந்த நேரமாயினும் பகல் இரவு என்று பாராமல், அவர்களைக் கவனித்து மருத்துவம் பார்க்க வேண்டும். இதற்குக் கட்டணமாக அவர்கள் எந்தத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. அரசாங்கம் இவர்களுக்காக இந்தச் சிகிச்சை அகங்களுக்குக் கட்டணத்தொகையைச் செலுத்திவிடுகிறது,

இதைவிட நாம் நம்பமுடியாத பொறுப்பை அரசாங்கம் ஏற்று நடத்துகிறது. அவர்கள் மருந்துக்குக் காசு தர வேண்டியது இல்லை. மருத்துவர் தரும் மருந்துச் சீட்டை மருந்து கடையில் நீட்டினால் அந்த மருந்துக்குக் காசு வாங்காமல் அவர்கள் மருந்து கொடுக்கின்றனர். அது எந்த