பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மிக்க முதியவர்களும் தம்மைப் பூசிக்கொள்வதில் பின் வாங்குவதில்லை. அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவள் ஒருத்தி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் தொடையில் உள்ள தோலை முகத்திற்கு மாற்றி இளமைக் கோலத்தைப் பெறச் செய்யும் முயற்சிகள் அங்கு; அங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் மேற்கொள்ளப் படுகின்றன என்று கேள்விப்பட்டேன். நரை திரை இவற்றை மாற்ற முடியும் என்பதற்கு அவர்கள் சவால் விடுகின்றனர்.

வீட்டு வேலைகள்

தொழிலுக்கு அங்கு மதிப்புத் தரப்படுகிறது; வீட்டு வேலை செய்ய வெளியார் தேவை இல்லை; பெருக்க; சுத்தம் செய்யத் துணிகள் துவைத்து உலர்த்த; அவற்றை மடித்துப் பதிய வைக்க; குளியல் அறை சுத்தப்படுத்த வேலைக்காரி சில வீடுகளில் தேவைப்படுகின்றனர். பொதுவாக அவரவர் வேலைகளை அவர்களே செய்துகொள்கின்றனர்.

சாமான்கள் கழுவத் துலக்க இங்கே செய்வது போல அவ்வளவு வேலை இல்லை; அவற்றை அதற்குரிய சாதனத்தில் (இயந்திரப் பெட்டி) போட்டுவிட்டால் சுத்தமாகக் கழுவி ஒளிப்படுத்துகின்றன. அதேபோலத் துணிகளும் சாதனங்களே வெளுத்துத் தந்துவிடுகின்றன. அவற்றைப் படியவைத்து மடித்து வைக்கவே ஆள் தேவைப்படுகிறது. வீடுகளில் தரைகள் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்டு இருக்கின்றன. வெறுந்தரையில் அவர்கள் நடப்பது இல்லை; கார்ப்பெட் விரித்து அவற்றின் மேல் சோபாக்கள் இட்டு அமர்கின்றனர். வீடு எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுகிறது; தூசுகள் அந்தக் கார்ப்பெட்டுகளில் படிகின்றன. அவற்றை நாம் துடைப்பத்தால் பெருக்கு வதுபோல அங்குப் பெருக்கிக் கூட்டுவது இல்லை; பெருக்கல் கூட்டல் கழித்தல் முறை அங்கு இல்லை. ‘வாக்குவம்