பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

பிழை செய்யாது; குறிப்பிட்ட மணி நேரங்கள் குறிப்பிட்ட வேலைகளை ஒழுங்காகச் செய்து முடித்து வெளியேறுவாள்; வரும்பொழுது அவள் காரிலேயே வந்து இறங்குகிறாள், வசதியுடையவளாகவே காணப்படுகிறாள். விசாரித்துப் பார்த்ததில் அவள் கணவன் வேறு ஏதோ தொழில் செய்வான்; குழந்தைகள் ஒன்று இரண்டு இருக்கும்; கணவனை அனுப்பிவிட்டுக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டு இவள் வீட்டுக்கு வருகிறாள். அதாவது வீட்டில் இருந்து பொழுதை வீணாக்காமல் தானும் தொழில் செய்து பொருளீட்டும் நோக்கில் இதை ஒரு உப தொழிலாக ஏற்று நடத்துகிறாள் என்று தெரியவருகிறது. அந்தக் குறிப்பிட்ட நேரம் அவள் இந்த வீட்டில் தன் கடமைகளை ஒழுங்காகச் செய்து முடித்து விடை பெறுகிறாள். அவள் மிகக் கவுரமாக நடத்தப்படுகிறாள்; பணிவாகவே அவர்களிடம் வீட்டுத் தலைவி உரையாடுகிறாள். எண்ணிப் பார்க்கிறேன் நம் நாட்டு நிலைமையை; ‘வேலைக்காரி’ என்றால் பொதுவாக ஏழ்மையில் உந்தப்பட்டவள் என்பது இங்கு நடை முறை.

வீட்டுத் தலைவி தொழிலுக்குச் சென்றால் வீட்டில் இருந்து குழந்தைகளைக் கவனிக்கவும் ஒரு சிலர் உதவுகின்றனர். அவர்களுக்கு ‘குழந்தைக்கு அமர்வோர்’ (baby sitter) என்று பெயர், அவர்களும் மணிக்கணக்கிட்டு ஊதியம் பெறுகின்றனர்.

புறந்தூய்மை

வள்ளுவர் இரண்டு தூய்மைகளைப் பற்றிக் கூறுகின்றார்; அகந்தூய்மை; புறந்தூய்மை என்பர்; அகந்தூய்மை என்பதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுகிறோம்; புறந்தூய்மை என்பதைப் பற்றி அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். வீட்டுக் குப்பை தெருவில் கொட்டிவைக்க முடியாது; அவற்றை ஒரு பையில் (நம்