பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஊர்த் தபால் நிலையத்துக் கோணிப் பைப் போல்) போட்டு வைக்க வேண்டும், வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வெளியே கொண்டுவந்து வைக்க வேண்டும். லாரிகளில் வந்து அவற்றை எடுத்துக் கொட்டிக்கொண்டு அந்தப் பைகளை அங்கு வைத்துவிடுகின்றனர். அல்லது வேறு பைகளை வைத்துச் செல்கின்றனர்.

வீட்டிலேயும் கண்ட இடத்தில் குப்பை போடுவது இல்லை. உடனுக்குடன் குப்பைக் கூடைகளில் சேர்த்து விடுகின்றனர். அங்கே பொருள்கள் அழுகுவது இல்லை . இறால் மீன் இறைச்சி எலும்புகள் கூட நாற்றம் எடுப்பது இல்லை. ஏன்? அந்தக் குளிர் நிலை அழுகலைத் தடுக்கிறது. தெருக்களில் ஒரு சிகிரெட்டுத் துண்டுகூட போடமுடியாது; ஓரங்களில் எங்கோ சில இடங்களில் தபால் பெட்டிகள் போலக் குப்பைப் பெட்டிகள் வைக்கப்படுகின்றன, அங்குச் சென்று கிழிச்சல் கடிதங்கள்; குடித்துப் போட்ட டப்பாக்கள் சீசாக்கள் எந்தப் பொருளும் போட்டுவிட வேண்டும்.

காரில் மைல் கணக்கில் பயணம் செய்யும்போதும் குப்பைகளை வீசி எறிந்துவிட வாய்ப்பு உண்டு; யார் கவனிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் தோன்றலாம். அவர்கள் அந்த நிலையிலும் வெளியே தூக்கி எறிவது இல்லை. தவறு கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக் கட்டணங்கள் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வழிப் பாதைகளைக் கெடுக்கக் கூடாது என்ற உணர்வு தோன்றிவிடுகிறது.

கார்களில் நீண்ட பயணங்கள் செய்யும்போதும் அவசரமாக ‘வெளியே’ போகமுடியாது; அடக்கம் மிக மிக அவசியம். அங்கங்கே சில மணித்துளிகள் தங்கிக் கழித்தலும் கூட்டலும் செய்துகொள்ள அமைப்புகள் உள்ளன.