பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

நிற்கச் சுரங்க வழிகள் அமைத்திருப்பதும் வியப்பாக உள்ளது. இருநூறு ஆண்டுகளாக அவை மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. மேலே இருக்கிற மரம் செடிகள் கட்டிடங்கள் அப்படியே இருக்கக் கீழே சுரங்கங்கள் அமைத்து உள்ளே குடைந்து கார் பார்க் செய்யத் தூண்கள் மீது கூரைகள் வேயப்பட்ட பரப்பு இடங்களை அமைத்து இருக்கிறார்களே அதே போன்ற நிலை இங்கு உண்டாக்க முடியுமா? சென்னை மவுண்ட்ரோடு அரசு இல்லம் இராசாசி மண்டபம் பல்கலைக் கழகக் கட்டிடங்கள் அப்படியே மேலே இருக்க அவற்றின் கீழ்ப் பூமியில் (under ground) பாதளச் சுரங்க வழிகள் அமைத்துக் கார்கள் நிற்க வழி செய்ய முடியுமா?

சென்னைக் கடற்கரையில் ரயில்பாதைக்குக் கீழே ஒரு பாலம் அமைத்திருக்கிறார்கள். அதில் அவ்வப்பொழுது நீர் ஊற்று எடுத்துப் பாதையை நிரப்பிவிடுகிறது. சதா பழுது பார்ப்பது என்பது நடைமுறை அன்றாட வேலையாக இங்கு அமைந்து விடுகிறது. அங்கு எப்படி இதைச் சாதித்து இருக்கிறார்கள்.

பாதாளத்தில் ரயில் விடுதல் மற்றொரு பெரிய சாதனை; லண்டன் மா நகர் முழுவதும் கீழே ரயில் பாதைகள் மிகப் பாதாளத்தில் அமைக்கப்பட்டுக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. நகரங்களின் பல முக்கியமான இடங்களில் உள்ளிருந்து மக்கள் வெளிக்கிளம்பி தலை காட்டுகின்றனர், போக்குவரத்து இடையூறுகள் இன்றி விரைவில் பயணம் செய்ய இப் பாதாள ரயில்கள் பயன்படுகின்றன; பாரிஸ் மா நகரிலும் இந்தப் பாதாள ரயில் பாதை அமைப்பு இடம் பெற்றுள்ளது. இவை மிகப் பெரிய சாதனைகள் என்றுதான் கூறமுடியும். எத்தனை ஆண்டுகள் எவ்வளவு இன்ஜியர்கள் எவ்வளவு தொழிலாளர்கள் எந்திரக் கருவிகள் இவற்றைச் செப்ப