பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

னிடப் பயன்பட்டன? மிகப் பழைய நகரம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

மறக்கமுடியாத அனுபவம்

நான் தங்கியிருந்த இடத்திற்கும் லண்டன் நகரத்திற்கும் அறுபது மைல் தூரம் இருக்கும் அங்கே ரயில் பேருந்துகளில் போவதை விட சொந்தக் கார்களில் செல்வதையே அங்குப் பெரும்பாலும் மேற்கொள்ளுகின்றனர்.

நான் தனிமையைப் போக்கிக்கொள்ள லண்டன் நரத்திற்குச் சென்று வருவது உண்டு. போகவரத் திருப்பு டிக்கட் வாங்கிக்கொண்டால் சலுகை கிடைக்கிறது. காலை ஒன்பது மணிக்கு மேல் பயணம் செய்தால் பாதிக் கட்டணம்தான் வாங்குகிறார்கள். ஒன்பது மணிக்குள்ளாகச் செல்கின்றவர்கள் தத்தம் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள்; அதற்கு மேல் பயணம் செல்பவர் பெரும்பாலும் வேலை வெட்டி இல்லாதவர்கள்; அவ்வளவு அவசரம் இல்லை. முதியவர்கள் பெரும்பாலும் ஒன்பது மணிக்கு மேல்தான் பயணம் செய்கின்றனர்.

லண்டன் முன் பின் தெரியாத ஊர்; எப்படிச் செல்வது எங்குச் செல்வது சும்மா ஊர் சுற்றிக்கொண் டிருப்பது என்ற அடிப்படையில்தான் அங்குப் போனேன். தனியாக இடம் அறிந்து செல்வது என்பது அரிய சாதனையே யாகும்.

அங்கே ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல வேண்டுமானல் பேருந்துகளில் தெரிந்தவர்களே போக முடியும்; மற்றவர்கள் போக அனுபவம் தேவை.

எனக்குப் பிடித்த பகுதிகள் கிரீன் பார்க்கு, ஹைட் பார்க்கு, டிரபால்கர் ஸ்கொயர், பிக்காடலி இவை குறிப்-