பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

வில்லை. அங்கே சுவர்களில் வரைவுகள் எழுதி வழிகாட்டி இருக்கின்றனர். ஏறும் வண்டிகளிலும் அந்த வண்டி செல்லும் பாதை குறித்துப் படம் இருக்கும். நாமே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அங்கே ரயில் டிக்கட்டுப் பரிசோதகர் நின்றுகொண்டிருந்தார், அவரைக் கேட்டேன். அவர் “கீழே போகவும்” என்று கூறி வழி காட்டினார். கீழே சென்று மறுபடியும் எனக்கு விளங்காமல் திண்டாடினேன். மறுபடியும் அவரிடம் சென்றேன்; கேட்டேன். ‘மறுபடியும் முயற்சி செய்’ (Try again) என்றார். அவர் நினைத்திருந்தால் எனக்கு என்னுடன் வந்து என் அறியாமைக்கு இரக்கம் காட்டி வழி காட்டி இருக்கலாம். அங்கே தீட்டியிருந்த வரைபடங்கள் வழி காட்டத்தானே இருக்கின்றன. இவர் எனக்கு வந்து வழி காட்டி இருந்தால் அந்த வரைபடம் குறைபாடு உடையது என்று ஆகியிருக்கும்; அல்லது நான் புரிந்து கொள்ள முடியாத அப்பாவியாக மதிக்கப்படவேண்டும். இரண்டையும் தவிர்க்க அவர் “மறுபடியும் முயல்க” என்று கூறினார் என்று நினைக்கிறேன். என் முயற்சியில் வெற்றி பெற்றேன்.

நமக்கு அவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவதில்லை; நாம் பேசும் ஆங்கிலம் அவர்களுக்குப் புரிவதில்லை. எழுத்து இருவருக்கும் பொதுவானது. ‘கண்களே நமக்கு வழி காட்டி; காதுகள் பயன் படா’ இந்த அனுபவம் மறக்கமுடியாத ஒன்று என்று நினைக்கிறேன்.

பேசிவிட்டால் ஆறிவிடுகிறது

இங்கிலாந்து ஒரு ஜனநாயக நாடு; பேசும் உரிமை இருக்கிறது; நமக்கும்தான் பேசும் உரிமை இருக்கிறது; நாம் பேசுவதற்கு ஓர் இடம் வேண்டும்; கேட்பதற்குச் சிலராவது வேண்டும். இங்கே மூர்மார்க்கெட்டில் முன்பெல்-