பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இதற்கெல்லாம் அடிப்படை என்ன? அங்கே ஐரோப்பாவிலும் சரி அமெரிக்காவிலும் சரி ஒரு நிறுவனத்திலோ அரசாங்கத்திலோ தொடர்ந்து தொழில் செய்பவர் வருடத்திற்கு ஆறுவார அளவு விடுமுறை சேர்ந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். பொதுவாகக் கோடையிலேயே இந்தச் சுற்றுலாக்கள் மிகுதியாக மேற்கொள்ளப்படுகின்றன.

மற்றும் வீட்டைப் பூட்டிவிட்டு தைரியமாக அங்கு வெளிக் கிளம்ப முடியும், வீட்டை உடைத்துத் திருடர்கள் புகுந்துவிடுவார்களே என்ற அச்சம் அந்த நாடுகளில் இல்லை; கதவுகள் கண்ணாடிக் கதவுகள்தான். சட்டம் இரும்புச் சங்கிலிகள்; காவல்துறை மிகச் செம்மையாகச் செயல்படுகிறது. மக்கள் இப்படித் திருடிப் பிழைக்க வேண்டும் என்ற கீழ்மைக்குப் போவது இல்லை; வாய்ப்புக் கிடைத்தால் கொள்ளை அடிப்பது என்ற மனப்பான்மை அங்கு வளரவில்லை. மற்றவர் பொருளை மதிக்கிறார்கள்; அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. மற்றொன்று காப்பு உறுதி (insurance) அவர்கள் இழப்பை ஈடு செய்கிறது. திருடு போனால் போலீசார் ஓரிரு வாரங்களில் தம்மாலான முயற்சிகள் செய்கின்றனர். அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால் உடனே காப்பு உறுதி நிறுவனங்கள் இழப்புத் தொகையை முழுவதும் ஈடு செய்கிறது. ஒவ்வொன்றிற்கும் காப்பு உறுதி செய்யப்படுகிறது. உடைமைக்கும் உயிர்க்கும் பாதுகாப்புத் தரப்படுகிறது. குடும்பத் தலைவன் அகால மரணம் அடைந்தால் அந்தக் குடும்பம் தவித்து நிற்கத் தேவை இல்லை; பொதுவாக அவர் காப்பு உறுதி செய்து வைத்திருப்பார். இங்கேயும் காப்புறுதிகள் செயல்படுகின்றன; நிறுவனங்கள் உடனுக்குடன் செட்டில் மெண்டு செய்யும் மனப்போக்குக் கிடையாது, கார் மோதி மற்றோர் காருக்குச் சேதம் உண்டானாக இடித்த