பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

இங்கு வந்து தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் இவர்களின் விருந்தினர்களாகத் தங்கிப் பொழுதுபோக்கும் வசதி மிக்க வாழ்க்கையைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் காய்கறி உணவுகளையே உண்பர்; மாமிசம் மீன் தவிர்த்தவர்கள். அவர்கள் தனியே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் அதிகம் உருளைக்கிழங்கு வறுவல் நீட்டு நீட்டமாக இருக்கும். அது தான் சாப்பிடத் தகுந்த சுவை உடையது. ஜெர்மனியில் ஒரு ஓட்டலில் இன்னும் மறக்க முடியவில்லை. முழுக் கோழி இறைச்சி சுவையாக இருந்தது. பெரிது அல்ல; பசியார உண்ட நினைப்பு.

எங்களோடு வந்த அமெரிக்க மாது மீன், இறைச்சி தவிர்த்து வந்தார்கள். அவர்கள் அதிகம் ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தார்கள். ‘கேட்டதற்கு'த் தான் சைவ உணவுதான் உண்பது என்று தெரிவித்தார்கள். பல பேர் அமெரிக்காவில் சைவ உணவு மட்டும் உண்கிறவர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

அவர்களோடு மற்றும் இருவர் அமெரிக்கப் பெண்கள் வந்திருந்தனர், எங்களுக்கு ஒரு ஆச்சரியம் எப்படி இவர்கள் துணிந்து இவ்வளவு தூரம் தனியாகப் பிரயாணம் செய்கின்றனர் என்பது வியப்பாக இருந்தது. மூவரும் மூன்று இடங்களிலிருந்து வந்தவர்கள். அங்கே அவர்கள் அவ்வப்போது கலந்து உரையாடுகிறார்கள்.

இவர்களுக்குப் புருஷன்மார் என்ற ஒரு துணை இருக்காதா? அவர்களை விட்டுத் தனியே ஏன் வரவேண்டும் இரண்டு பேரும் போனால்தானே ஒருவர்க்கொருவர் துணை சந்தோஷமாய் இருக்கலாம்” என்ற ஐயம் ஏற்பட்டது.

துணிந்து அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு கிடைத்த பதில் :

“நாங்கள் வருஷம் பூராவும் இணைந்து வாழ்கிறோம் எங்களுக்கும் விடுதலை வேண்டாமா? என்று சிரித்துக்