பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பயங்கரமான நகர் என்று பேசுகிறார்கள், சிகப்பு விளக்குப் பகுதி மற்றும் பம்பாயில் பத்திரிகைகளில் எழுதுவதைப் படித்து இருக்கிறோம்.

பாரிசில் நெருக்கடி, மிக்க பகுதிகளில் கவனமாகச் செல்ல வேண்டும் என்று எங்கள் பேருந்து வழிகாட்டி சொல்லி அனுப்பினாள்; ஒவ்வொரு ஊரைப் பற்றியும் அவர்கள் தக்க அறிவிப்புகள் தருகிறார்கள். அதன்படியே நடந்தது. எங்களில் ஒரு பயணி பணத்தைப் பறி கொடுத்ததாக வந்து சொல்கிறார். மற்றொருவரும் அதே அனுபவத்தை உறுதி செய்தார்.

அதே போல ஆம்ஸ்டர்டாம் என்ற நகரில் விழிப்பாக இருக்கவேண்டும். வழிபறி செய்துவிடுவார்கள். காரணம் கஞ்சா அபின் அதிகமாக அவர்கள் பழகி வருவதால் காசுக்கு எதையும் செய்யத் துணிவார்கள் என்று அச்சுறுத்தினார்கள். அவர்கள் சொன்னது உண்மை; அங்கங்கே சுயநினைவு கெட்டு மயங்கிக் கிடக்கும் போதைவாசிகளைச் சந்திக்க முடிந்தது.

ஜெர்மனியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இடத்தில் நன்றாகக் குடித்துவிட்ட ஒருவன் சுய நினைவு இல்லாமல் தடால் என்று கீழே விழுகிறான். அதிகக் குடியால் இப்படி வாழ்க்கையை அலங்கோலமாக்கிக் கொள்பவர்கள் ஒரு சிலரைப் பார்க்கவும் முடிந்தது. நம் நாட்டுச் சாராயக் கடைகளிலும் ரசிகர்கள் ஆடி அசைந்து அவர்கள் பாடுவதைக் கேட்டு இருக்கிறேன். அவர்கள் பாட்டுப் பொதுவாகப் பகைமையைப் புலப்படுத்தும் வசை புராணங்களாக அமைவதைக் கவனித்து இருக்கிறேன். நல்ல நிலையில் அடக்கமாக இருக்கிறவர்கள் பூவாணமாக வெடிப்பதைப் பார்த்திருக்கிறேன். (தீமை அதிகம் விளைவதில்லை அதனால் பூவாணம் என்றேன்) இதையெல்லாம் பார்க்கும்போது