பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

சொல்கிறான் மறக்காமல் தன் அட்டையைப் புதுப்பிக்கும் படி.

இப்படிச் சுவையும் கருத்தும் மிக்க புதுக் கவிதைகளை நம் நாட்டில் செய்து வருகிறார்கள். அவற்றை நம்மால் மறக்க முடியவில்லை.

அந்தக் கவிஞர் பல கவிதைகளை அவர் சொல்லிக் கொண்டு அவரே சிரித்துக்கொண்டு வந்தார். மற்றவர்கள் அவருக்கு மரியாதை தருவதற்கு அவற்றைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனால் அவர்கள் சிரிக்கவில்லை, பேருந்து செல்லும் வேகத்தில் அதன் வரிகள் சில சிதைந்து போயிருக்கும்; அவர்களுக்குப் புரிந்து இருக்காது என நினைக்கிறேன்; அல்லது அவரைத் திருப்திப் படுத்துவதற்காக அவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். அதைப்போன்ற சூழ்நிலைகள் நமக்கும் ஏற்படுகின்றன. பிடிக்கிறதோ இல்லையோ மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் தீரவேண்டும். அந்த மனிதரை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் :

அந்தப் பேருந்து வழிகாட்டி ஒரு பரிசை வைத்திருந்தாள். பயணம் முடிந்ததும் “இந்த பஸ் எத்தனை மைல் சென்றிருக்கும்” என்று ஒவ்வொருவரையும் குறித்துத் தரும்படி கேட்டு இருந்தாள். நான் இரண்டாயிரம் மைல் என்று எழுதித் தந்தேன்; மற்றவர்கள் அவரவர்கள் கணிப்புப்படி எழுதியிருந்தார்கள். அந்தக் கவிஞர் சரியாக ஆயிரத்து இருநூறு. என்று எழுதியிருந்தார். அவர் பரிசைத் தட்டிக் கொண்டார். அவருக்கு உயர் ரக மது பாட்டில் தரப்பட்டது.

ஒவ்வொரு தேசமும் ஒரு சில மறக்கமுடியாத சம்பவங்களை சாதனைகளை நினைவுச் சின்னமாகப் போற்றிக் காக்கின்றன; விளம்பரப்படுத்துகின்றன. பாரிசில் “ஈஃபில்