பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

பார்க்கவில்லை. ஒருநாள் ஏறித்தான் பார்க்க வேண்டும். இங்கே ‘உயர் தூக்கி’ இல்லை; அது ஒரு குறைதான். இருக்கலாம்; அது செயல்படுவது இல்லை என்று தெரிகிறது.

அந்த ஈஃபில் டவர் அந்த நாட்டின் சின்னம்; அது உ.ணர்த்தும் செய்தியும் உள்ளது. இரும்புத் தொழில்; இயந்திரக் கருவிகள்; தொழிற்சாலைகள் இவற்றை வளர்த்தால்தான் நாடு உயரமுடியும் என்ற கருத்தை அறிவிக்கும் ஒரு அறிகுறியாய் அது விளங்குகிறது.

பெல்ஜியம் நாட்டில் ஒரு அடையாளச் சின்னம் போற்றப்படுகிறது. அரசனின் குழந்தை ஒருவன் காணாமல் போய்விட்டான்; அவன் கண்டுபிடிக்கப்பட்டான்; அவன் (சிறு குழந்தை) இறைவன் படைப்பை மறைக்காமல் நின்றுகொண்டு ஒன்றுக்குப் போகிறான்; (அதிக சொற்களைப் பயன்படுத்த விரும்பவில்லை. தெளிவாகச் சொல்லிவிட்டேன்), அதை ஒரு சிறு சிலையாகத் தெருச் சந்தியில் வைத்திருக்கிறார்கள். அது அந்த நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. அந்தப் பொம்மை பல வடி.வங்களில் விற்பனை ஆகிறது.

தென்னகத்திற்கும் தனிப் பெருமை உண்டு; தமிழ் நாட்டின் ஆட்சிச் சின்னம் திருக்கோயில் சின்னம்; அது நம் பழமைச் சிற்பக் கலை, தெய்வீகம், பண்பாடு இவைகளை விளக்கிக்கொண்டு இருக்கிறது. அதன் பெருமை வெளிநாடுகளில் இருந்து நினைத்துப் பார்க்கும் பொழுது. தான் தெரிகிறது. கோயில்கள் சிற்பங்களோடு கூடிய இந்த அழகு உலகில் எங்கும் இல்லை என்று கூறிவிடலாம். விஞ்ஞானம் வளரவும், உயர் கட்டிடங்கள் எழுப்பலாம்; கலைச் சிற்பங்களை இவர்களால் படைக்க முடியாது. அதனால்தான் நம் நாட்டுச் சிலைகள் சில கள்ளக்கடத்தலும் செய்யப்படுகின்றன. அவை சிலைச் சிறப்புக் காரணமா பஞ்ச லோகங்களின் விலை மதிப்பின் உயர்வு காரணமா