பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

தின் பல பாகங்களில் இருந்து நடனப் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். அதில் பையன்களும் சேர்ந்து ஆடுகின்றனர். அவர்களும் அழகில் அவர்களை வென்றவர்களாகவே காணப்படுகின்றனர். வான மகளிர் இந்த மானுடத்தை எப்படி மகிழ்விக்க முடியும். இவர்கள் அதை விரும்புகிறார்கள் மூடி மறைப்பதில் பயனில்லை. சிலைகள் உயிர் பெற்று இங்கே நம் முன் ‘நாங்கள் மனிதர்களின் பிரதிநிதி உருவங்கள் தான்’ என்று சொல்வது போலத் துணிந்து நிற்பதுபோல அவர்கள் காட்சி தருகிறார்கள். மேலை நாட்டுப் பெண்கள் அணியும் உடையால் வேறுபடுகின்றனர்; அவர்கள் சேலை உடுத்துவது இல்லை; பலவகை சட்டைகளையும் கால் சட்டைகளையும் அணிந்து தமக்கென ஒரு பாணி அமைத்து உடுக்கின்றனர். நம் நாட்டு மகளிர் சேலை கட்டிய மாதர்; அந்தப் பெயர் வாங்கியவர்கள். இரண்டும் இல்லாமல் பெண் பெண்ணாகக் காட்சி அளிக்க முடியும் என்பதை அந்த நடனத்தில் காட்டி மகிழ்வித்தனர். நான் கண்களை மூடிக்கொள்ளவில்லை. அவர்கள் சில இடங்களை மட்டும் நமக்காக மூடியே வைத்தனர். எந்தவித விரசமுமின்றி மேலாடை நீங்கிய வனப்பினைக் கண்டு அதை ஒரு கலைப்பொருளாக ரசிக்க முடிந்தது. வண்ண முகைகள் இதழ்கள் விரிந்த பூக்களாக மலர்கின்றன; அன்னப் பெடைகள் தாமரை மலரை விட்டுத் தண்ணீரில் தாவி நடக்கின்றன. காட்டு மயில்கள் மேகம் கண்டு மனம் குளிர்ந்து தோகை விரித்து ஆடுகின்றன. சிறகைப் பெற்ற தெய்வ மகளிர், மின்னும் நட்சத்திரங்கள். குழந்தையின் மலர்ந்த சிரிப்பு இவற்றையெல்லாம் அந்த நடனக் காட்சிகளில் காண முடிகிறது. அந்த இளம் வாலிபர்கள் அவர்களோடு சேர்ந்து இணைந்து ஆடினர். அது ஒரு கலை; அதை ரசிக்கும்போது நாம் ஞானிகள் அல்ல என்ற உணர்வோடு இருந்தால்தான் அது நமக்கு விருந்தாக அமைகிறது.