பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கையில் கோப்பையில் ‘சாம்பயின்’ என்ற மதுவகை ஒரு அளவு ஊற்றித் தந்தார்கள். அதைப் பருகிக்கொண்டே அந்தக் கலை விருந்தைக் கண்டு ஈடுபடுகிறார்கள். ‘மதுவும் மங்கையும்’ இரட்டைப் பிள்ளைகள் என்ற கோட்பாட்டை அந்த நிலை நினைவூட்டுகிறது.

அதைவிட மற்றொரு சிறிய காட்சி மறக்கமுடியாமல் நிற்கிறது. நாங்கள் அந்த நடன அரங்கை விட்டுப் பேருந்து நோக்கி நடக்கிறோம். நள்ளிரவு நேரம்; விளக்குகள் அதைப் பகலாக்குகின்றன. கூட்டம் கூட்டமாகவே நகர்ந்து செல்கிறோம்.

பாரி முனை ‘செல்லாராம்’ கடைப்பக்கம் போகிறோமா என்ற நினைவு எழுகிறது; உள்ளே சேலை விற்கிறார்கள்; அதற்காக வெளியே செல்லுலாய்ட் பொம்மை; அந்த பொம்மை ஒரு விளம்பரப் பொருள். அதற்கு விதவிதமாக உடை உடுத்துகிறார்கள்; கவர்ச்சிப் பொருளாகவே இருக்கிறது.

இங்கே உடையே உடுத்தாமல் இப்படி ஒரு பொம்மையை உட்காரவைத்தால் அது கவர்ச்சியாகத்தானே இருக்கும். ‘கன்னிப் பெண்’ - இது பருவத்தைக் குறிக்க வந்த சொல்லி அவள் மணமானவளா இல்லையா என்பது அல்ல கேள்வி; கவர்ச்சி மிக்க இளநங்கை; அதைச் சொல்லைத்தான் கன்னிப்பெண் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அவள் ஆடையில்லாமல் ஷோகேஸ் பொம்மையைப் போல் அந்தக் கட்டிடத்துப் படிக்கட்டு ஓரத்தில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறாள். நடந்துகொண்டே இருக்கிறோம். அந்த உருவம் மின்னல்போல் காட்சி அளிக்கிறது: அது மறையவில்லை. அங்கேதான் உட்கார்ந்து இருக்கிறது. நாங்கள் மறைகிறோம். அந்த உருவம் ஒரு விளம்பரப் பொருள் உள்ளே அது சிவப்பு விளக்கு வீடு என்பதற்கு அடையாளம். கடைப் பொருள் வெளியே