பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

யிருக்கிறது. நாம் அந்த நாடுகளைப் போலத் தொழில் வளத்தால் முன்னேற வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது; முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திராட்சைக் கொடிகளை வழி எங்கும் காணமுடிகிறது , அதனால் அங்கு ‘வைன்’ உற்பத்தி அதிகம் நடைபெறு கிறது. பிரான்சில் பாரிசுக்கு அருகே ‘சாம்பெயின்’ என்ற வைன் வகை பதப்படுத்தப்படுகிறது. பூமிக்கு அடியில் சுமார் இருபது மைல் தொலைவிற்குச் சுரங்கவழி கீழே தோண்டப்பட்டு சுமார் இருபது முப்பது அடி அகலப் பாதையில் இரண்டு பக்கம் புட்டிகள் அடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் அவை தேக்கி வைக்கப்பட்டுப் பழமைப்படுத்தப்படுகின்றன. நாறு ஆண்டுகளாக அங்கு அந்தத் தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அது புளித்துப் பழமை பெறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதற்கு விலை மிகுதி என்று தெரிவிக்கப் பட்டது.

அங்கு ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற அறிவுரையைச் சொன்னால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள். திராட்சைப் பழச் சாறுகளைப் பதப்படுத்தி மதுவகை செய்வது முக்கியமான தொழில்; அதனால் பல குடும்பங்கள் பிழைக்கின்றன. குடி குடும்பங்களை வாழவைக்கின்றன என்பதுதான் பொருந்தும்.

கிராமங்களைப் பார்க்க முடியவில்லை

கல்லூரியில் படித்த நாட்களில் ஆங்கில வகுப்புகளில் பாடம் நடத்தும்போது கிராமியக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுக் கவிதைகள் படிக்கப்பட்டன. கவிஞர் ‘கோல்டு ஸ்மித்து’ கிராமங்களிலிருந்து நகரங்களுக்குக் குடியேறி விடுவதால் கிராமங்கள் பழங்காட்சிகளை இழந்து பொவி விழந்துவிட்டன என்று எழுதுவார். ‘புறக்கணிக்கப்பட்ட