பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கார்கள் ஹார்ன் செய்வது இல்லை

அந்த நிலைமை இங்குப் பார்க்கவே முடியாது. ஒலி பெருக்கினால் வழி கிடைக்கும் என்று லாரிகளில் எழுதியிருக்கிறார்கள். ‘இன்டி.கேட்டர்கள்’ கார் எப்படித் திரும்புகிறது என்பதைச் சுட்டிக் காட்டிவிடும். பொதுவாகப் பெரிய பாதைகளில் போக ஒரு வழி; வர ஒரு வழி; எதிர் எதிரே மோதிக்கொள்ள வாய்ப்பு இல்லை. அதாவது இடது பக்கம் முழுவதும் ஒரு பாதி போகும் வண்டிகள்; வலது பக்கம் முழுவதும் எதிர் வண்டிகள். அதனால் கார்கள் மோதிக்கொள்ள வாய்ப்பு இல்லை. இங்கிலாந்தில் இடது பக்கம் போகின்றன. பிரான்சில் வலது பக்கம் போகின்றன. இங்கிலாந்து முறையைத்தான் நாம் பின் பற்றுகிறோம். இங்கிலாந்தில் இன்னும் மைல் கல் தான் கணக்கில் இருக்கின்றது. பிரான்சில் கிலோ மீட்டர்கள் கணக்கு. நாம் பழைய முறையை மாற்றி கிலோ மீட்டர் கணக்குக்கு வந்திருக்கிறோம், ரூபாய்க்கு 16 அணா பழைய கணக்கு; இப்பொழுது நூறு பைசா; நாம் அளவைகளை இப்பொழுது மாற்றிக் கொண்டோம்.

இடது பக்கம் போகும் வழியில் மூன்று பாதைகளாக இயங்குகின்றனர். மிக ஓரமாகப் போகிற வண்டிகள் மெதுவாகப் போகும் இயல்பின; அதனைக் கடக்க அடுத்த பாதையில் செல்லலாம். இடையில் நடுத்தரமான வேகம்;. இரண்டையும் கடக்க வலது ஓரம். வேகமாகச் செல்லலாம். இந்த மூன்று பாதைகள் தெளிவாக இயங்குவதால் மோதல்கள் நிகழ்வது இல்லை.

விளக்கு ஒளிகள் காட்டும் அறிகுறிகள் கொண்டு கார்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு வழி விட்டுச் செல்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ‘ஹார்ன்’ செய்வது இல்லை. வண்டிகளில் ஹார்ன்கள் பொருத்தப்பட்டு இருக்கும். மிகவும் அவசரமான நிலையில்