பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

கல்வி முறையில் நாம் கருதத்தக்க சில நல்ல அமைப்புகள் அங்கே உள்ளன; நம் பிள்ளைகளுக்குப் பயன் உள்ள கல்வி என்று படுமானால் அங்குப் பெரும் போட்டி ஏற்படுகிறது. போட்டிகள் அதிகமாகும் போது ஊழல்களும் உடன் விளைகின்றன. அதைப்பற்றி அதிகம் எழுதுவது தேவையற்ற ஒன்று; தெரியாததைச் சொல்லியது ஆகாது. நூலின் தரம் குறைந்துவிடுகிறது . நம் குறைகளை எடுத்துச் சொன்னால் தவறு இல்லை. அவற்றை எப்படி மாற்ற முடியும்? வழி கூற முடியவில்லை. அதனால் பேசிப் பயன் இல்லை .

ஒரு சில படிப்புகள் பயன் உள்ளவை என்று மதிப்பிடப்படுகின்றன. அதனால் மற்ற துறைகளில் மாணவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது. மற்றொரு கேடு இப்பொழுது கல்வியைச் சுற்றி வட்டமிடுகிறது. திரைப்படங்கள் நம் மாணவர்களை மிகவும் குறைவாக மதிப்பிட்டு அவர்கள் ஒழுங்கற்றவர்கள் என்பது போலக் காட்டுகின்றன, ‘ஒரு தலை ராகம்’ முதலில் இதற்கு வழி காட்டியது; பாலியல் பின்னணியில் மாணவர்களைச் சித்திரித்துக் காட்டுகிறது. நம் கல்வி நிறுவனங்களையே சாடுவதாகிறது. கதையில் கரு வேண்டும் என்பதற்காக மாணவர்களின் ஒருதலைப்பட்ட வாழ்க்கை முறைகளை மிகைப்படுத்திக் காட்டுகிறது, இந்தப் படங்களை எடுக்கக் கல்லூரி நிறுவனங்களே இடம் அளிக்கின்றன. இவை சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள். காதல் படு தோல்விகளுக்குக் கல்லூரிகள் நிலைக்களம் என்பது போன்ற திரைச் சித்திரங்கள் பெருகிவிட்டன.

முன்பெல்லாம் ஆசிரியர்களை முக்கியமாகத் தமிழாசிரியர்களைக் கிண்டல் செய்து நாடகம் எழுதினார்கள். அவர்கள் நாடகத்திற்குக் கோமாளித்தனத்துக்குப் பயன் பட்டார்கள். இன்று மாணவர்கள் காதல் கீழ்மைகளுக்கு