பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

வரும்போது ரகளைகளுக்கு இவர்கள் துணை நிற்கின்றனர். பெண்களும் இப்படி ஒழுங்குபடாமல் வன்முறையில் அல்ல மென்முறையில் இயங்குபவர்களும் உண்டு; அவர்களை ஒன்றும் அடையாளம் காண இயலவில்லை; சொல்லித் தெரிந்து கொண்டேன். எல்லாம் எங்கேயும் ஒழுங்காக இருக்கிறது என்று எப்படிக் கூறமுடியும், அளவில்தான் வேறுபாடு. இவர்களைத் ‘தேறாத கேசுகள்’ (drop outs) என்ற செல்லப் பெயரால் குறிப்பிடுகின்றனர்.

வழிமறிக் கொள்ளைகள்

இந்த வன்முறையாளர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது நம் நாட்டில்தான் வழிபறிக் கொள்ளைகள் மிகுதி என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது; செயின் (பொன்) பறித்தல், வீடு புகுந்து கொள்ளையிடுதல் இப்பொழுது பெருகிவருகின்றன. காரணம் அண்மைக் காலத்துச் சூழ்நிலை; பிச்சை எடுப்பது குறைந்துவிட்டது. அதைவிடத் திருடுவது விரைவில் முன்னேறவழி என்பதைக் காண்கின்றனர், ஒழுங்காக வேலை செய்து பிழைப்புக் காண முடியாத சூழ்நிலைகள் உருவாகும்போது வெள்ளாடும் வேங்கைகளாக மாறிவிடுகின்றன.

இப்பொழுது எது நல்லது எது கெட்டது என்ற அடிப்படை பார்வை மறைந்துவிட்டது. எது லாபகரமானது, எது உபயோகமானது, எது வளம் தருவது, எப்படி வாழ்ந்தால் உழைப்பு இல்லாமல் வாழமுடியும் என்ற மனப்போக்கு தலையெடுத்து ஓங்குகிறது. ‘கள்ளாமை’ என்ற அதிகாரத்துக்கு ஓய்வு கொடுக்கப் படுகிறது. தோல்விகள், செயலற்ற போக்கு, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருவிருப்பு, அறிவு வளர்ச்சி, அஞ்சாமை இன்று இக்குற்றங்களைத் தூண்டுகின்றன. இன்று கள்ளக் கடத்தல்,