பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

வேறுபடுகிறோம் என்பதைக் காட்டவே இதைப் பற்றிப் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விலை நிர்ணயம்

கடைகளில் பொருள் வாங்குவது என்பதைவிட விலை பேசுவது என்பது பெரிய விஷயம். நம்மில் சிலர் சொன்னதை அப்படியே கொடுத்துவிட்டு வாங்கி வந்து விடுகிறோம். பேரம் பேசத் தெரிவதில்லை. பேரம் பேசுவது இங்கு அவசியமாகிறது. கடைக்காரனே சொல்லிவிடுகிறான்; “நான் சொல்வது இது; நீங்கள் கேளுங்கள்” என்று சொல்லிவிடுகிறான்.

நாம் மிகக் கீழே இறக்க அவன் கட்டுப்படியாகாது என்று எடுத்துச் சொல்ல, பிறகு ஒருவிதமாக முடிவு செய்து “சரிதான் எடுத்துப் போங்க” என்று சொல்லப் பிறகு பேரம் படிகிறது. இதில் நேரம் வீணாகிறது. நேரம் போகட்டும் நம்மைப் போன்ற ஏமாளிகள் கூடுதல் விலையைத் தான் கொடுத்துவிட்டு வருகிறோம்.

காய்கறிக் கடை, மீன் கடை, சில்லரை வியாபாரிகள் இவர்களிடம் இப்படி மல்லுக் கொடுத்துப் பழகிவிட்டோம். இப்பொழுது தான் சில கடைகளில் பெரிய கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை ஒப்புக்கொண்டு பொருள்களை வாங்கி வருகிறோம், அவர்களே கணக்குப் போட்டு இவ்வளவு லாபம் வந்தால் போதும் என்று முடிவு செய்வது நல்லது. என்ன செய்வது மற்றொரு கடை போட்டி போட்டு அந்த விலையைக் குறைக்கிறது. அதனால் எதையும் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. நெகிழ்ந்து கொடுக்க வேண்டியுள்ளது.

அங்கே கடைகளில் பேரம் பேசத் தேவை இல்லை. விலைகள் எழுதி ஒட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். ஒரு