பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கடைக்கும் மற்றொரு கடைக்கும் அதிக வித்தியாசம் இருப்பது இல்லை. மற்றொன்று கடை வீதிகளில் நம் நாட்டைப் போலத் தனித் தனிக் கடைகள் இருப்பதோடு பெருநகரங்களில் கடை மையங்கள் (shopping centres) வைத்து நடத்துகிறார்கள். உள்ளே சென்று விட்டால் அது ஒரு பொருட்காட்சி சாலை போல இருக்கும். கார்கள் நிறுத்த ஓர் மாடி அடுக்கு அல்லது பூமியின் கீழ் மற்ற அடுக்குகளில் லிஃப்டுகள் படி ஏற்றங்கள் இந்த வசதிகளோடு பலதுறை அங்காடிகள் வைக்கப்பட்டு இருக்கும். நம்முடைய ‘குறளகம்’ சூப்பர் மார்க்கெட்டுகள் இவற்றைப் பின்பற்றியமைந்தவையே எனலாம். விரிந்த பரப்புகளைக் கொண்டவை அவை. அவர்கள் தம் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் அங்கே சென்று பெற்றுக் கொள்ள முடிகிறது. காய்கறி, பழச்சாறுகள், ஐஸ்கிரீம், சாக்லெட்டு, பிஸ்கத்துகள், குடிவகைகள், பிளேடு முதல் சென்டு வரை எல்லாச் சாமான்களும் எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே வரும்பொழுது அவற்றை வரிசையாக எடுத்துவைக்க பில் போட்டு விடுகிறார்கள். அதை இயந்திரக் கருவிகள் நம்முடைய தட்டச்சு மிஷின்போல ஒவ்வொரு கடையும் வைத்திருக்கிறது. கையில் எழுதி பில் போடுவதே இல்லை. தள்ளுவண்டிகளில் வைத்துத் தள்ளிக் கார்களுக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர். பெண்ணும், ஆணும் சிலசமயம் குழந்தைகளோடும் வந்து குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாரத்துக்கு ஒரு முறை மாதம் சில முறை வந்து நிரப்பிக்கொள்கின்றனர். கையில் பணமே கொண்டுவரத் தேவையில்லை; செக்குகள் தரலாம்; ‘கிரெடிட் கார்டு’ காட்டினால் அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு பில்லில் நம் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். பாங்கிக்கு அனுப்பி அவர்கள் காசு பெற்றுக் கொள்வார்கள். அங்கே போதிய பணம் நம் கணக்கில் இல்லாவிட்டாலும் கவலை இல்லை. அவர்கள் செலுத்தி விட்டு நம் கணக்கில் எழுதிவிடுவார்கள். ஒவ்வொரு