இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
________________
அகிலும் தேக்கும் அழியாக் குன்றம் அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு
அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்
அடிநாள் ஈன்ற அன்னை தந்தை
தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்
சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு)
ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு
(வா)
புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப்
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு
(வா)
திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க.
தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க
இங்குத் திரவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்தே எங்கள் நாடு
(வா)