உணர்ச்சி
51
விடுகிறான். தவிர, இவ்வுலகத்திலுள்ள மனிதரையும் பொருளையும் விட்டுவிட்டுத் தான் மரித்துப் போதல் திண்ணம் என்பதை உணர்ந்து அவன் பிரவர்த்தியில் நீதியை அனுசரித்தும், பிறவற்றில் இயற்கையைத் தழுவியும் நடப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழிப்பான். நீதியான நடையையும் நிகழ்வதில் திருப்தியையும் கைக்கொண்டதால், அவன், பிறர் என்ன நினைப்பர், என்ன சொல்வர், என்ன செய்வர் என்பதைக் கனவிலும் கருதான். கடவுள் நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவதைத் தவிர வேறொன்றும் விரும்பான்.
95
96
நல்ல மனிதன் என்பவன் எப்படிப்பட்டவனாய் இருக்கவேண்டு மென்பதைப் பற்றி இனிப் பேசாதே. ஆனால் நீ நல்ல மனிதனாய் இரு.
97
உண்மை நெறி அறிந்தவனுக்கு, துக்கத்தையும் அச்சத்தையும் ஒழித்து இருக்கவேண்டுமென்று ஞாபக மூட்ட வெகு சாதாரணமாயிணும் ஒரு சிறு நீதி வாக்கியம் போதும். உதாரணமாக ஹோமர்[1] உரைத்த மொழியை உற்று நோக்குக :
- ↑ ஹோமர் - கிரேக்கர்களின் ஆதிகவி. இலியாது என்றும் ஒதிஸ்ஸே என்றும் இாண்டு மகாகாவியங்கள் எழுதியிருக்கிறார்.