பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/4

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



                      முகவுரை.
                        ------
    இதிகாசக்கதாவாசகம் எனப்பெயாிய நூலொன்று முதற் பதிப்பாகச் சென்ற ஆண்டில் என்னால் எழுதிப்பெற்று வெளிவந்தது. அதனைத்தமிழ் நாட்டிலுள்ள கலாசாலை ஆசிாியா் பலர் விருப்புடன் எற்று என்னை ஊக்கினர்கள். இப்போது அப்புத்தகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் புத்தகமாகிய இது வெளியாகின்றது.

இப்புத்தகத்தில், தெய்வங்கொள்கை, இராஜதர்மம், இமாஜ தி, பெரியார்பெருமை, பெரியாரைப் பிழையாமை, மாதா பிதா குருபக்தி, வைதிக லெளகிக ஞானங்கள், மக்கட்கு இன்றிய மையாத பலவித ஒழுக்கநெறிகள்,பண்டைக்காலத்து நம்நாட்டின் பழக்க ஒழுக்க நாகரிகமுறைகள் முதலிய பல விஷயங்கள் ஆய்வுக்குப் புலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்புத்தகத்தில் கூறப் பெறும் விஷயங்களெல்லாம் யோகஞானங்களாற் சிறந்த முனிவர்கள், புலவர்கள் முதலிய பெரியோாது கருத்துக்களாகையான் அவை கற்போர்க்குப் பெரிதும் உபகாரப் படுமென்பது எனது கருத்தாகும். இப்புத்தகத்தின் நடையை மாணவர்க்கு எளிதில் விளங்கும்படி சந்தவின்பத்தோடு செம்பாகமாக அமைத்துள்ளேன். இப்புத்தகத்தைப் படிக்கும் மாணவர்கள், தமிழ்ப்பாஷா னமும் நல்லொழுக்கமும் கைவரப் பெறுவார்கள் என்பது ல. முதற்புத்தகத்தைப் போலவே இவ்விரண்டாம் புத்தகத் திழும் தத்தம் கலாசாலையில் ஆதரித்து என்னை இன்னும் இத்தகைய பணிகளிற் புகுத்தி ஊக்கி உபசரிக்கும்படி கலாசாலை ஆசிரியர்களையும் தமிழபிமானிகளையும் வேண்டிக் கொள்கின்றேன். சோதை அகம், இங்ஙனம், மதுரை. ஆ. கார்மேகக் கோன்.