பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்னுரை தமிழகம் வந்த இந்திராகாந்தி அம்மை யார் அவர்களுக்கு, தி. மு. க. கறுப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியை அறவழியில் நடத்தியபோது, காவல் துறையினரால் வன்முறையும், அடக்குமுறையும் கட்ட விழ்த்து விடப்பட்டு ஆயிரக்கணக்கான கழ கத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர் களில் நானும் ஒருவன். 1977 அக்டோபர் திங்கள் இறுதியில் கைதாகி நாற்பது நாட்கள் சென்னைச் சிறையில் அடைபட்டி ருந்தபோது எழுதியது இது! நாட்டின் வரலாற்றில் இது ஒரு பகுதி! பயன்படும் என்பதற்காக நூல் வடிவில் தரப்படுகிறது. அன்புள்ள, மு.கருணாநிதி