பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

KAMALA BOOK HOUSE: 02 NEW (300K SELLERS, NEWS AGENTS

  • LISSARY SUPPLIERS) Opp.M.M,C

BURMA BAZAAR MADRAS-500 இந்தியாவில் ஒரு தீவு ந்திய நாட்டு வரலாற்று ஏட்டில் நேருவின் குடும் பத்திற்காகப் பலநூற்றுக் கணக்கான பக்கங்களைப் படிக்க வேண்டியிருக்கும். வெள்ளையர்களின் ஆதிக்கக் கொடி நிழலுக்கு அஞ்சியொடுங்கி அடங்கி நடக்க வேண்டு மென்றிருந்த காலத்திற்கு விடை கொடுத்தனுப்ப விடுதலைத் தீ கொழுந்து விட்டெரிந்தபோது சுதந்திரப் போரின் சிப்பாய்களுக்கு வழி நடத்திச் செல்லும் தளபதி களாக விளங்கியவர்களில் பண்டித மோதிலாலும் ஒருவர். அவரது திருமகன் நேரு பெருமகனார் விடுதலை கிடைக்கும் வரையில் போராடியவர் மட்டுமல்ல; விடுதலை பெற்ற இந்தியாவுக்குப் பிரதமராகவும் பதினேழு ஆண்டுக் காலம் பதவி வகித்து மறைந்தவர். நேருவின் ஆட்சிக் காலத்தை ஒளிமிகுந்த காலம் என்று மனம்விட்டுப் புகழ்ந்து, நாடு எல்லா வகையிலும் முன்னேறி வளங்கொழிக்கும் பூமி யாகிவிட்டது என்று பாராட்ட முடியாவிட்டாலும், அவர் ஜனநாயகத்தை மதித்திடக் கற்றவராகவே திகழ்ந் தார். அவரது அருமைச் செல்வியார் இந்திராகாந்தி அம்மை யார் ஜனநாயகம் என்ற சொல்லையும், சமதர்மம் என்ற சொல்லையும் உச்சரிக்காத மேடைகளே இல்லை எனலாம்!