பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

இந்திய சமுதாய... /விருந்தோம்பல் பண்பாடு


ஆடைகளைத் தயாரித்தனர். இந்தத் துவக்கம், பின்னர் பருத்தி பட்டு நெசவு வேலையே பெண்களுக்குரியதாக ஆயிற்று எனலாம். அடுப்பும், பாண்டங்களும் இவள் கைகளினால் உருவாயின.

இல்லத்தில் இருந்தபடி செய்யும் பணிகளனைத்தும் இவள் செய்தாள். தந்தையாண் சமுதாயம், பெண்ணைத் தாய் மக்களிடம் இருந்து பிரித்து, தங்களிடையே ஊன்றச் செய்வதையே திருமண சடங்காக உறுதிப்படுத்தியது. பலவந்தமாகப்பற்றிக் கொண்டுவராமல், அன்போடு அணி கலன்களும், பரிசில்களும் வழங்கி, மகளுக்குப் பிரியா விடை கொடுத்துத் தாய்வீட்டு மக்கள் அனுப்ப, மணமகன் தன் இல்லம் கூட்டி வந்தான். ஓ, இங்கு நீ இந்த இல்லத்தின் அரசியாக வாழ்வாயாக! இந்த இல்லத்துக்குச் சொந்தமான கன்று காலிகளுக்கு நீயே எஜமானி! இந்த வீடே, இந்தச் சுற்றமே, இந்த வண்மைகளே உனக்கு உரியவை! என்று புதிய வீட்டுக்கு அவளைப் பொற்றோரணங்கள் வளைத்து வர வேற்றார்கள். ருக்வேதம் காட்டும் திருமணத்தின் சாரம் இதுவே.

பிறந்த மண்ணிலிருந்து பிரிக்கப்பட்ட இவள், இப்படிப் பூவாரங்கள், பொன்னாபரணங்களினால் போற்றப் பட்டாலும் இவளுக்கும் இவள் உடமைகளுக்கும் உரியவன் ஆண் என்று தீர்ந்தது. மண்ணும், பெண்ணும் உடமைகள் என்றான பின் மனித வாழ்க்கையில் இனக் குழுக்களிடையே மோதலும், போர்களும், கொடுக்கல் வாங்கல் சமரசங்களும் விரிவு பெறலாயின.

கொடுக்கல் வாங்கல் சமரசங்கள், 'பெண்' அடிமைகளாக இருந்த நிலையிலும், அரசிளங்குமரிகளாக இருந்த நிலையிலும், எந்த வேற்றுமையும் இல்லாமலே பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டனர்.

தாழ்ந்த குல அடிமைகளும், யவனம், மிகிரம் போன்ற நாடுகளில் இருந்து வந்த அரசிளங்குமரிகளும், இந்தியக்