பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

இந்திய சமுதாய... /கடவுளின் மணவாட்டி



தெய்வீகத்தைத் தொடர்பாக்கி, இந்த வாணிபம் வளர, ஆடல், பாடல், தத்துவ விளக்கங்கள் என்று அரிய கலைகள் மேல் வருணத்தாரால் வளர்க்கப்பட்டன. சபிக்கப்பட்ட குலம் தன்னைத்தான் தோற்றிக்கொள்ள இணைக்கப்பட்ட பட்டுக் குஞ்சலங்கள் பல.

இவள் நித்ய சுமங்கலி. இவள் இருப்பிடமே மங்களமானது. இறைவனுக்கு ஆடிப்பாடி, மங்கள ஆரத்தி எடுத்து ஊழியம் செய்வது போல், இவளை ஆதரிக்கும் பெருங்குடி மக்களுக்கும் இவள் இதே ஊழியங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில், ‘கல்லாகிய தெய்வம் இவளுக்குப் பொன்னும் பொருளும் தருமா? அப்படி இவளை ஆதரிப்பவர்கள் இவளுக்குத் தெய்வம் போன்றவர். அவர்கள் இல்லங்களில் இவள் எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் ‘நித்ய சுமங்கலி’யாக இருந்து வாழ்த்து வசனங்களைச் சொல்வாள். தன் உடல் பொதுச் சொத்து என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் அவர்கள் அந்த ஆண்கள் தங்கள் பொருள் ஆடம்பர அதிகாரங்களை அவள் மீது செலுத்தத் தலை வணங்கி உடன் படுவாள்.

இதுவே தாசியின் தருமமாக இருந்தது.

இவளுடைய ‘பொதுமகள்’ மரபு, உடைக்க முடியாத தெய்வீக ஆணை பெற்றது என்று பல நூற்றாண்டுக்காலம் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது. அமரகவி பாரதியின் காலத்தில் வாழ்ந்த எட்டயபுரம் அரண்மனைத் தேவதாசி, வள்ளிக் கண்ணம்மாளின் மகள் கூறினாள்-

முப்பத்தைந்து வயசுக்குப் பிறகு, பாரதி சொன்னார்களென்று, என் அம்மா ஈசுவரனுக்கு வரித்துக் கட்டிக் கொண்ட பொட்டுத் தாலியை அவிழ்ந்து விட்டுக் கல்யாணம் செய்து கொண்டார்...

'ஆனால் கடைசியில் சந்ததி வறுமையினால் கஷ்டப்படுவதைப் பார்த்துச் சங்கடப்பட்டார். நூறு வருசம்