பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

57


இதைப் பார்க்கவா வாழுகிறேன்-ஈசுவரனுக்குக் கட்டிக் கொண்ட தாலியை எடுத்துவிட்டு மனிதனுக்கு மனைவியானது பாவமோ’ என்று சங்கடப்பட்டார்.

தேவதாசிமுறை என்பது, கற்பியலைப்போல் பெண்களின் ஆளுமையில், ‘உன் உடலை ஒருவருக்கு உரிமையாக்குவதைவிட இது உயர்ந்தது; ‘இறைவனுக்கே நாயகி; இறை பணியே உன் பெருமை’ என்றெல்லாம் பதிக்கிறது. இறைவனுக்கு நாயகி நான். கடவுளைத் தொட்டுப் பூசை செய்யும் நீயும் என்னைப்போல் ஒருவன். நீயே கடவுளாக முடியுமா?’ என்று எந்த ஒரு தேவதாசிப் பெண்ணும் இரவில் அதே மலர்மாலையுடன் மஞ்சத்துக்கு வரும் பூசாரிப் பிராம்மணனையும் ஒதுக்கியதாக வரலாறே இல்லை. அவன்தான் முதல் உரிமைக்காரன். உயர்வருணம் குருசுவாமி ‘ஓ, இவன் உறவு கடவுள் உறவே போன்றது; கடவுளின் பிரதிநிதி’ என்று தேவதாசியானவள் உருவேற்றப் பட்டிருக்கிறாள்.

உயர் வருணம். அடுத்து, பொருளும் அதிகாரமுமாக ஆளும் வருக்கம். மன்னர்களுக்கு அவள் உரிமைப் பொருள் ஏனெனில் மன்னரின் ஆதரவில்தான் அவள் வாழ முடியும். பொருள்... அது ஒன்றே குறிக்கோள். ஓர் ஆடவனை மகிழ்விக்கக் கூடிய கலைகள் அனைத்தும் அவள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆடிப்பாடி அவன் மகிழ அனைத்து உபசாரங்களையும் செய்வாள். அதற்குகந்த அணிமணிகள், ஆடைகள் அனைத்தும் தொழிலுக்கு இன்றியமையாதவை. வாழ்வுக்கு உடலை முதலாக்கி, ஒரு வாணிபம் செய்யும் கட்டாயத்துக்குப் பெண்ணைத் தள்ளிவிட்ட ஓர் ஒழுங்கு தான் தேவதாசி முறை. ஆடற், பாடற் கலைகள், மேலாம் ஆன்மீக விடுதலையைக் குறிப்பாக்குவதாகும் என்றும் நாட்டிய சாத்திரத்தின் உள்ளார்ந்த தத்துவமும் அதுதான் என்று பக்கம் பக்கமாக விளக்கங்கள் கொடுக்கப்