பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

இந்திய சமுதாய... /கடவுளின் மணவாட்டி


படுகின்றன. ஆனால், பெண்ணுடன் தொடர்பு படுத்தப்பட்ட இக்கலைகள், அந்த வகையில் தான் விளக்கப்படுகின்றனவா? நம் புராணக் கதைகள்-இந்திரனின் ஆதிக்கத்தில் இருந்த அரம்பை-ஊர்வசி-மேனகை ஆகியோர் ஆன்மீக விடுதலையைக் குறிப்பாக்கித் தம் கலையை மேன்மைப்படுத்திய விவரங்கள் இருக்கின்றனவா? அவர்கள் தவமுனிவர்களின் தவங்களைக் கலைக்கத்தானே பயன் படுத்தப்பட்டனர்?

ருக்வேதம்-முதல் மண்டலத்தில் (1-20-6) காணப்படும் பாடல் இந்திரன், வருணன் முதலிய தேவர்களைப் புகழ்ந்து பாடும் பாடல்களை யாத்தவர், தேவதாசியின் மகன் பருச்சேபன் என்ற குறிப்பு காணப்படுகிறது. சாதாரணமாக, தந்தைவழிப் பெயரே குறிப்பிடப்படும் வழக்கிலிருந்து இந்தக் குறிப்பு வேறுபட்டிருக்கிறது. அக்காலத்திலேயே, கடவுளருக்கு தாஸி என்ற பிரிவு ஏற்பட்டிருந்ததா-என்பது ஆய்வுக்குரியதாகும்.

அப்ஸரஸ்-கந்தருவர் என்று வேதப்பாடல்களில் காணப்படும் இனத்தினர் பற்றியும்- இயற்கையின் பல கூறுகளை உள்ளடக்கிய உருவாக்கங்களா -(ஸவிதாவின் மகள் சூரியா - சூரியக் கதிர் - ஸோமன் சந்திரன் - அசுவினி தேவர்-காலை-மாலைச் சந்திகள் -சூரியக்கதிர் சந்திரனில் படிவதே திருமணம்) என்பதை அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை. அப்ஸரஸ்-என்றால் நீரில் உலாவுபவர் என்ற பொருள் கிடைக்கிறது. மேகங்களை, வசந்த காலங்களைக் குறிக்கும் கற்பனையாக இருக்கலாம்.

ஆனால், வருண பேதங்கள் ஆழ்ந்து நீ பெரியவன் நான் பெரியவன் என்ற தகராறுகள் முற்றும் போது, உண்மைப் பிரதிபலிப்புகள் அறவே அழிந்து போகின்றன.

அப்படி அப்ஸரஸ்கள் தேவலோக மாதராகியிருக்கலாம். இந்திரனின் ஆளுகையில் பரத்தையராகியிருக்கலாம். அவனை மீறிப் புகழ்பெற, எந்த முனியேனும் மூச்சடக்கித்