பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலையைச் சீவிப் பொட்டு மிட்டுச்
சட்டை போட்டுக் கொள்வேன்!-நல்ல
சட்டை போட்டுக் கொள்வேன்!
அலையை வீசும் கடற்க ரைக்கே
அப்பா வோடு செல்வேன்!-மாலை
அப்பா வோடு செல்வேன்!

கடலைப் பார்த்துக் காலை நீட்டிக்
கரையில் குந்திக் கொள்வேன்!-கடற்
கரையில் குந்திக் கொள்வேன்!
கடல லைகள் சீறிப் பாயக்
கையைப் பிடித்துக் கொள்வேன்!-அப்பா
கையைப் பிடித்துக் கொள்வேன்!

வேர்க்கடலை மிட்டாய் சுண்டல்
விற்கும்; வாங்கிக் கொள்வேன்!-அங்கு
விற்கும்; வாங்கிக் கொள்வேன்!
ஊர்இ ருட்ட அப்பா வோடே
ஒப்பாய் வந்து சேர்வேன்!-வீட்டிற்(கு)
ஒப்பாய் வந்து சேர்வேன்!