பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போன மாமா திரும்பிவந்தார் ;
புதிய குடையை வாங்கிவந்தார் !
நானும் குடையை விரித்துக்கொண்டு
நடந்து போவேன் பள்ளிக்கின்று !

போன தாத்தா திரும்பிவந்தார் ;
புதிய வண்டி வாங்கிவந்தார் !
நானும் அதிலே ஏறிக்கொண்டு
விரைந்து செல்வேன் பள்ளிக்கின்று !

42