பக்கம்:இன்னொரு உரிமை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமதேனு97


கமலசுந்தரி அம்மாவை சட்டை செய்யாமல், புல் கயிற்றை அவிழ்க்கப் போனாள், இதற்குள் திருமலையம்மா சின்ன வீட்டிற்குள் போய், சோளக்கஞ்சியையும் வேகவைத்த அகத்திக்கீரையையும் கும்பாவில் கலந்து நான்கைந்து மிளகாய்களையும் உப்புக் கொத்தையையும் கையால் பிடித்தபடி மகனிடம் வந்தாள்.

"திருவோல விட்டு இறங்குல; இந்தா,"

"எனக்குக் கஞ்சி வேண்டாம்முன்னு ஒன்கிட்டே ஒரு தடவை சொன்னா போதாது?"

"இன்னிக்கு... ஒனக்கு என்னல வந்துட்டு....."

"இனிமே என்ன வரணும், என்ன ஊர், என்ன பயலுக...." நம்மால இனிமே ஒரு நொடிகூட இந்த ஊர்லே இருக்க முடியாது."

"என்னடா விசயம்?"

"சொன்னா நீ மட்டும் என்ன பண்ணிடப் போறே...."

"சொல்லித் தொலையில... ஏழா... கவுகண்ணி ... புல்ல ஏன் அளிக்கு வெளியே போடுறே... ஒழுங்கா போடு மூதேவி... ஏலே...முத்துலிங்கம் சொல்லுடா. அம்மாகிட்டே சொல்லாமல் யாருகிட்டே சொல்லுவ?"

முத்துலிங்கம் கைகள் இரண்டையும் முஷ்டிகளாக்கி அவற்றை ஒன்றோடு ஒன்று குத்த வைத்துக்கொண்டான், உதடுகளைப் பிதுக்கிக்கொண்டான். பிறகு கோபாவேசமாய் ஒப்பித்தான்.

"தோட்டத்துலே இருந்து நான் பாட்டுக்கு சிவனேன்னு இந்தச் சுமையோடு வரேன். மெட்ராசில் இருந்து அம்மன் குடைக்காக ஊருக்கு வந்திருக்கிறான்னுவ பாரு! சிவசைலமும், தங்கமுத்தும்.... இவன்களும படிச்சுட்டு வேலை வெட்டியில்லாம ஊர்ல காலித்தனமா சுத்துற மேலத் தெரு

சி.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/106&oldid=1369351" இலிருந்து மீள்விக்கப்பட்டது