பக்கம்:இன்னொரு உரிமை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2சு. சமுத்திரம்


“நான் இங்க வெறுமையா கிடக்கேன். ரஞ்சித் கண்ணுக்குள்ளே நிக்கான். கண்ணப்பன் நெஞ்சுக்குள்ளேயே நிக்கான்.”

“ஒன் மருமகள்.”

“அவள்மேல இருந்த கோபம்கூட போயிட்டு. அவளையும் பார்க்கணும் போல தோணுது.”

“அப்போ பம்பாய்க்கு போயிட்டு வா! பிளைட்ல வேணும்னாலும் போ!”

“ஒங்கள இப்படி தனியா விட்டுட்டா.”

“எப்பா... இப்படிப்பட்ட வார்த்தயக் கேட்டு பன்னி ரெண்டு வருஷமாச்சு! வனவாசம் முடிஞ்சுட்டு, எனக்கும் புரிய வேண்டியது புரிஞ்சுட்டு; ஒனக்கும் தெரிய வேண்டியது தெரிஞ்சுட்டு.”

“டி.வி சினிமா பார்த்து ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டீங்க.”

தாத்தா, பாட்டியின் கையைப் பிடித்து இழுத்தார். அவளும், அது பொறுக்காதவள் போல் அவரருகே உட்கார்ந் தாள். தாத்தா அவள் மஞ்சள் கயிற்றைத் தூக்கிப் பிடித்து, அங்குமிங்குமாய் ஆட்டியபடியே எதையோ பாராமல் படித்து ஒப்பிக்கும் பள்ளி மாணவன் போல் ஒப்பித்தார்.

“ஆயிரம் பிள்ளை பெத்தாலும், ஐயாயிரம் பேத்தி எடுத்தாலும் முதல்ல இருந்து முடிவுவரைக்கும் புருஷனுக்குப் பெண்டாட்டியும், பெண்டாட்டிக்கு புருஷனும்தான் துணை என்கிறது எவ்வளவு நெசமாயிட்டு பாரு! இடையில வாரதுங்க இடையிலேயே போகுதுங்க. மகள் என்கிற செடிய பதியம் போட்டு எடுத்துட்டுப் போறாங்க! மகன் என்கிற கிளையை வேற இடத்துல நடுறாங்க, இது தெரியாமல், பேத்தியைப் பார்த்து புருஷன் பெண்டாட்டியை மறக்கான்! பேரனைப் பார்த்து பெண்டாட்டி புருஷனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/11&oldid=1369473" இலிருந்து மீள்விக்கப்பட்டது