பக்கம்:இன்னொரு உரிமை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமதேனு103

காமல் இருப்பதைப் பார்த்துவிட்டு “ஏ கமலசுந்தரி அவனை கஞ்சி குடிக்கச் சொல்லுளா” என்று சொல்லவும் அவள் மறக்கவில்லை.

கமலசுந்தரி சொல்லவில்லை; முத்துலிங்கம் சாப்பிடவில்லை. மெல்ல எழுந்தான். ‘பெரிய’ வீட்டிற்குள் போய், கொடியில் கிடந்த கரைபோட்ட நாலு முழ வேட்டியைக் கட்டிக்கொண்டான். அண்ணன் எடுத்துக் கொடுத்த சிலாக்கைப் போட்டுக்கொண்டான். இதர துணிகளை ஒரு கைப்பைக்குள் திணித்தபடியே, வெளியே வந்தான். கமலசுந்தரி அண்ணனின் கைப்பையைப் பிடுங்கப்போனாள். அவன் அவள் கையைப் பிடித்தபடியே பேசினான்:

“கமலசுந்தரி... அம்மாமை ஜாக்கிரதையா பார்த்துக்களா. போன வருஷம் குளம் பெருகல. இந்த வருஷம் பெருகப்போறதா இல்ல. மானம் பார்த்த பூமிலே என்ன பண்ணமுடியும்னு அம்மாவுக்குத் தெரியமாட்டேங்குது. தீனி போடமுடியாமல் உழவு மாட்டையும் வித்து, பசுமாட்டையும் வித்தாச்சு. கட்டாந்தரையா கிடக்கிற நிலத்தை நம்புனால் நாம கட்டாந்தரையாப் போகவேண்டியதுதான். அண்ணன் ஏன் போறேன்னு அம்மாவுக்குப் புரியாட்டாலும், ஒனக்குப் புரியும். ஒன்னையும் ஒரு நல்ல இடத்திலே சேர்க்கணும்னா நான் இந்த இடத்துலே இருக்கப்படாது! ஏமுளா அழுவறே! நான் எனக்காக மட்டுமா போறேன்... ஒனக்காகவும் போறேன். அம்மாவை நல்லா பார்த்துக்க. நானும் கடை போட்டுட்டா, மாசா மாசம் இன்னும் அதிகமாவே பணம் அனுப்புவோம். எம்மா, நான் போறேம்மா ஒன்னைத்தான்... எம்மா ... எம்மா.”

மகன் பேசுவதைக் கேட்க மறுத்து, அவனைப் பார்க்க மறுத்து, சொட்டுச் சொட்டாய் கண்ணீர் கன்றுக்குட்டியின் தலையில் தெறிக்க, கீழே கிடந்த புல் குவியலையே திருமலையம்மா பார்த்துக் கிடந்தாள். மகன் சத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/112&oldid=1368548" இலிருந்து மீள்விக்கப்பட்டது