பக்கம்:இன்னொரு உரிமை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதல் புறாக்கள்


ந்த வீட்டுப் புறவாசலில் இருந்து கும்மாளம்மா வெளிப்பட்டாள்.

புறவாசலுக்குக் கதவுபோல் தோன்றும் பச்சைக் குடை விரித்த வாகை மரத்தில், தலைகீழாய்ப் பாய்ந்த ஒரு அணில் வேரில் தத்திக்கொண்டிருந்த சிட்டுக்குருவிகளைத் துரத்தியதையோ, கரிச்சான் குருவிகளை கரக்கிளையில் தாங்கிக் கொண்டு காற்றோட்டத்தில் அவற்றைக் குலுக்கி குலுக்கித் தாலாட்டும் வாதமடக்கி மரத்தையோ பார்க்காமல், நேராய் அந்த புறாக்கூண்டை நோக்கியே போனாள். அதன் அருகே குடைபோல் குவிந்து கிடந்த கோழிக்கூட்டை, கால் தற்செயலாய் இடறி, உள்ளே கிடந்த தாய்க்கோழி புலிப் பாய்ச்சலில் உறுமியபோது, அவள் அதையும் பொருட்படுத்தாமல் அந்தக் கூண்டுக்கு அருகே கீழே குனிந்து பக்கவாட்டில் கையை நீட்டினாள்.

அவளைப் பார்த்தவுடனேயே உள்ளே கிடந்த புறாக்கள் கும்மாளமிட்டன. துள்ளித் துள்ளிக் குதித்தன. இரும்புத்துவாரங்கள் வழியாக உடம்பைத் திணிக்கப் பார்த்தன. கையிலிருந்த ஒரு கிண்ணத்தையும், தூக்குப்பையையும் புறாக்கூண்டுக்குக் கீழே வைத்துவிட்டு, அவள் அதன் கதவைத் திறந்துவிட்டாள். மூன்று அடுக்குகள் கொண்ட கூடு. ஒவ்வொன்றிலும் நான்காக முந்நான்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/118&oldid=1368704" இலிருந்து மீள்விக்கப்பட்டது