பக்கம்:இன்னொரு உரிமை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்மைக்கு முதுமை இல்லை 3


மறக்காள். கடைசியில இந்த ரெண்டுபேரையும் பிள்ளைங் களும், பேரன் பேத்திகளும் மறக்கும் போதுதான்... வயசான புருஷனும் வயசான மனைவியும் ரெண்டாவது இல்லறத்தை துவக்குறாங்க. உடம்பு படாம உள்ளம் மட்டும் படுற இல்லறம், இளமையில போட்ட ஒத்திக முதுமையில நிசமாவுற...”

“நீங்க சொல்றது ஒரு வகையில சரிதான்... ஆனாலும் நீங்க நினைக்கறது மாதிரி நான் ஒங்களை மறக்கலியாக்கும். மகள்கள் வீட்டுக்குப் போனாலும் சரி, மருமகளை திட்டிக்கிட்டோ, இல்ல திட்டு வாங்கிட்டு நிற்கும்போதோ சரி, நீங்க நல்லா இருக்கீங்களான்னு ஒங்கள ஒரு பார்வ பார்ப்பேன். எங்கே “சுத்துறீங்க, தள்ளாத வயசு தாங்காதுன்னு கேட்கப் போவேன். அதுக்குள்ள நான் கேட்க நெனச்சத கண்ணப்பன் கேட்டுடுவான், நீங்க தொலவுல நின்னாலும் முன்னால நீங்க கொடுத்த நினைப்பாலேய ஓங்கள மான சீகமா என் பக்கம் இழுத்துப் பிடிச்சு விடாம இருந்தேனாக்கும்.”

“நீ தப்பா நெனக்காட்டால் நான் ஒண்னு சொல்லட்டுமா...”

“பழைய மாதிரியேதான் பேசுறீங்க.”

“அதாவது நல்லதுலயும் ஒரு கெட்டதுண்டு, கெட்டதுலயும் ஒரு நல்லதுண்டு... நம்ம பையனும், மருமகளும் பேரன் பேத்திகளோட பம்பாய் போன இந்த ரெண்டு நாளா வீடே சூன்யமா, தெரியுறது நிசந்தான். ஆனாலும் பன்னிரண்டு வருஷத்துக்குப் பிறகு இந்த ரெண்டு நாளாத் தான் நாம பழையபடியும் மனம் விட்டு அன்னியோன்னியமாய்... என்னப்பா அப்டி முறைக்கே!”

“முதல்ல கண்ணாடிய மாத்துங்க, நான் ஒன்னும் முறைக்கல! சிரிக்கப் பார்க்கேன், அழுக வருது! அழப்பாக்கேன், சிரிப்பு வருது!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/12&oldid=1369477" இலிருந்து மீள்விக்கப்பட்டது