பக்கம்:இன்னொரு உரிமை.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்குனிவு

மைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தவன் ‘காலிங்பெல்’ சத்தம் கேட்டு கண் விழித்தான். பட்டப்பகல் பன்னிரெண்டு மணியளவில், சுகமான தூக்கத்திற்கு துக்கமணி அடிப்பதுபோல், மீண்டும் காலிங்பெல் சத்தம்; அவனுக்கு எரிச்சலாக இருந்தது. காலிங்பெல் அழுத்தப்படும் விதத்தை வைத்தே வந்திருப்பது அந்நியர் என்பதைப் புரிந்துகொண்டான். பால்காரராக இருந்தால் கதவைத்தான் தட்டுவார். மனைவியாக இருக்கமுடியாது. அவளாக இருந்தால், காலிங்பெல்லில் வைத்த கையை விடாமலே, ஒற்றைக்காலை தரையிலும், ஒரு விரலை பெல்லிலும் வைத்தபடி பிடிவாத மணியடிப்பவள் வேறு யாராக இருக்கும்? யாராவது இருந்துவிட்டுப் போகட்டும். எவனும் கொடுத்த கடனை ‘இந்தாருங்கள் ரொம்பத் தேங்க்ஸ்’ என்று சொல்லி வரப்போவதில்லை. கடன்காரனாக இருந்தால் திறக்கவேண்டிய அவசியமில்லை. தபால்காரராக இருந்தால் கதவுக்கு கீழே இருக்கும் இடைவெளியில் கடிதங்களைப் போட்டுவிட்டுப் போவார். ஏதாவது டொனேஷன் கிராக்கிகளாக இருக்கும். இதுகளுக்காக இயற்கையின் டொனேஷனான தூக்கத்தை விட அவன் தயாராக இல்லை.

அவன் மீண்டும் படுத்தான். மின்விசிறியை தட்டிவிட்டுக் கொண்டு, போர்வையை உச்சிமுதல் உள்ளங்கால் வரை மூடிப் படுப்பதில் உள்ள சுகத்திற்கு ஈடாக எதிலும் குறைந்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/130&oldid=1388256" இலிருந்து மீள்விக்கப்பட்டது