பக்கம்:இன்னொரு உரிமை.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்குனிவு125

“நோ... நோ! எல்லாம் என்னோட ஹப்பியோடடுயூஷன்! ஒருநாளைக்கு ஒய்போட வீட்டுக்கு வாங்க. அவருக்கு ஒங்களப் பிடிக்கும். நான் வாரேன் ஸார்! மிஸஸ் சேகரை என் வீட்டுக்கு வரச்சொல்லுங்கோ!”

“பை தி பை ஒங்க பேரு... ஸாரி தப்பா நினைக்காதீங்க! எனக்கு கணவர்பேர்ல மனைவியைக் கூப்புடுறது பிடிக்காது. என் மனைவியோட பெயர் லட்சுமி. உங்க பெயரைச் சொல்றதும் சொல்லாததும்...”

“அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு எழுந்து கொண்டே நீங்க சொல்றது மாதிரிதான் என் விட்டுக்காரரும் சொல்வார். என் பெயர் ரமா. நான் வாறேன் ஸார்!”

“ஓ.கே. மேடம்... எனக்கும் தூக்கம் வருது. என்னோட சரிபாதி எப்போ வாராள்னும் தோணல. அவள் வந்தவுடனே சொல்றேன்!”

“ஸாரி... ஒங்க தூக்கத்தைக் கெடுத்துட்டேன்.”

“நோ நோ! நீங்க வரும்போது சவுண்ட் தூக்கத்துலதான் இருந்தேன். அதாவது ஒரு சவுண்ட்ல கலையும்படியான தூக்கம்.”

ரமா உடல் விட்டுக் குலுங்கி, வாய்விட்டுச் சிரித்து, கண் பொங்கப் பார்த்து, கால் பெயர்ந்தாள். சேகரும் சடாரென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டான். பால்கனி வரைக்கும் சென்று வழியனுப்பவில்லை. கூடாது, ஒருத்தியைவிடாமல் பிடிக்கவேண்டும் என்றால், முதலில் விட்டுப்பிடிக்க வேண்டும். இதுதான் டெக்னிக். தயக்கமாக வந்தவளை சகஜமானவளாக மாற்றியாகிவிட்டது. சகஜம் உரிமையாவதற்கு நாட்களைத்தான் எண்ண வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/134&oldid=1388271" இலிருந்து மீள்விக்கப்பட்டது