பக்கம்:இன்னொரு உரிமை.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்குனிவு129

“நான்... இங்கிலீஷ் லிட்டரேச்சர்ல போஸ்ட்கிராஜுவேட், கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பிரைவேட் காலேஜில, அஸிஸ்டெண்ட் புரொபஸராய் இருந்தவள். அது மறக்கமுடியாத நாட்கள்”.

“இப்பகூட வேலைக்குப் போகலாமே!”

“அவருக்குப் பிடிக்கல.”

‘வீக்’ பாயிண்டை சொல்லிவிட்டவள்போல், ரமா முகம் சுளித்தாள். அவளை வீக்காக்குவதற்கு ஒரு பாயிண்ட்டைக் கண்டறிந்தவன்போல் சேகர் தன்னையறியாமலே சப்புக் கொட்டினான். லட்சுமி இப்போது மேஜையிலிருந்த ஸ்டாண்டை விட்டு விட்டு சுவரில் மாட்டியிருந்த ஒரு திரைச்சீலை ஓவியத்தைக் கண்களால் பிடித்துக்கொண்டிருந்தாள். இந்தச் சமயத்தில் வெளியேயிருந்து ஒருவன் வந்தான். பாராட்டும்படியான உருவமோ, பழிக்கும்படியான தோற்றமோ இல்லாதவன். இருபத்திரண்டு வயது இருக்கலாம். நடுவழியில் தயங்கி நின்றவனைப் பார்த்து ரமா, “உட்காருடா” என்றாள்.

பிறகு—

“இவன்தான் என்னோட ஒரே தம்பி கோபால் என்ஜினியரிங் பைனல் படிக்கிறான். இவ்வளவு நாளும் ஹாஸ்டல்ல இருந்தான். இப்போ இவன்தான் எனக்குக் காவல் அதோட ஆறுதல்! இவரு, நான் சொல்லலே. அவர்தாண்டா மிஸ்டர் சேகர். இவரும் என்ஜினியர்தான்.”

அந்தப் பையன் சேகரை மரியாதையோடு பார்த்துவிட்டு, ‘வணக்கம் ஸார்’ என்றான்.

“வணக்கம்! நீங்க மெக்கானிக்கலா ஸிவிலா?”

“எலெக்ட்ரிகல் ஸார்!”

“குட்... நானும் எலெக்ட்ரிக்கல்தான். பாடத்தில் சந்தேகம் வந்தால் என்கிட்டே கேளுங்க.”

சி.—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/138&oldid=1388283" இலிருந்து மீள்விக்கப்பட்டது