பக்கம்:இன்னொரு உரிமை.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130சு. சமுத்திரம்

‘தேங்க் யூ ஸார்’

மூன்றாவது ஆள் ஆக்கிரமிப்பில் சேகரால் ரமாவுடன் இச்சையோடு பேச முடியவில்லை. புறப்படலாம் என்பதுபோல், லட்சுமியின் கரத்தை வலிக்கும்படிக் கிள்ளினான். பிறகு “தேங்க் யூ மேடம்... நீங்களும், அவரோட எங்க வீட்டுக்கு வாங்க” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.

ஒரு மாத காலத்திற்குள், ஓராண்டு கால பழக்கம் ஏற்பட்டது. ‘பாஸ்கரன்களும்’, ‘சேகர்களும்’ மாறி மாறி ஒருத்தர் வீட்டுக்கு இன்னொருவராக வந்து சந்திப்புக்களையும் சமையல்களையும் பரிமாறிக்கொண்டார்கள். சேகர், மிஸ்ஸஸ் பாஸ்கரனை, ரமா என்று அழைக்கும் அளவிற்குப் போய்விட்டான். அதை, அவளோ அவள் கணவனோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலசமயம் (A) ஜோக்குகள்கூட அடித்தான். அவனிடம் ரமாவும், தன் கணவனின் ஏனோதானோ போக்கைச் சொல்லி குறைபட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவன் ஆறுதலாகப் பேசுவான். லட்சுமிகூட, அவனிடம் ‘நீங்க... ரமாகிட்ட ஓவராப் பேசுறீங்க! நேற்றுகூட, ஆபாசமாக ஜோக் அடிக்கிறிங்க! தப்பா எடுத்துக்கப்போறாள்’ என்று தெரிவித்தாள். உடனே சேகர், ‘எடுத்துக்கப்போறாள்’ என்பதை இன்னும் எடுக்கவில்லை என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ‘நீ ஒரு அசடுடி... ஒரு பெண்கிட்ட சகஜமாய் பேசுறதுல தப்பில்ல... இன்னும் சொல்லப்போனால், அப்படி சகஜமாய் பேசினால்தான், தப்பான எண்ணம் வராது’ என்று அடங்கா ஆசையுடன் மனைவியை அடக்கி வைத்தான். ‘ஒனக்குத்தான் ஸோஷியலாய் பழகத் தெரியல! இவ்வளவுக்கும், நீயும் காலேஜ்ல குப்பை கொட்டினவள்’ என்று தூங்கியவளை எழுப்பிச் சொன்னான்.

நாளாக நாளாக நட்பிற்கு ஆண்டுக்கணக்கில் வயதாகியது. ரமாவின் தம்பிக்கு வலியப்போய் பாடங்களை போதித்தான். மற்றவர்கள் சந்தேகப்படக்கூடாது என்பதற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/139&oldid=1388288" இலிருந்து மீள்விக்கப்பட்டது