பக்கம்:இன்னொரு உரிமை.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்குனிவு131

காக, அவனைத் தன் வீட்டுக்கும் வரவழைத்து ‘டியூஷன்’ போட்டான். அவனை ‘வாடா போடா’ என்று சொல்லுமளவிற்கும் வந்தான்.

காய் கனிவதுபோல் தோன்றியது. ஓரிரு தடவை, ரமாவை தண்ணீர் வாங்கும் சாக்கில் தொட்டுப் பார்த்தான். அவள் விலகவும் இல்லை. விரையவும் இல்லை. அதேசமயம் அவள் அன்னியோன்னியமாக பழகுபவள்போல் அவனைப் பார்க்கும்போது மாராப்புச் சேலையை மூடவில்லை. தலைமுடியை ஒதுக்கிக்கொள்ளவில்லை. பேசும்போதுகூட தம்பியிடமோ, கணவனிடமோ பேசும் சகஜ நிலையிலேயே பேசினாள். அவன் முன்னால் சில பாடல்களைக்கூட முணுமுணுத்தாள். அதுவும் டூயட் பாட்டுக்களை.

ரமா தன்னுடைய பெருந்தன்மையில்தான் இன்னும் விடப்பட்டிருக்கிறாள் என்ற மிதப்போடு நினைத்த சேகர், தானாக தேடாமல் அவளாக வரட்டும் என்ற தோரணையில் சிறிது பொறுமையாகக்கூட இருந்தான். அன்று அவனுக்கு டில்லி ‘கேம்ப்’. மனைவி சூட்கேஸை நிரப்பி மூடியபோது, சேகர் பூட்ஸ் லேசைக் கட்டிக்கொண்டிருந்தான். கோபால் விடுவிடுவென்று ஓடிவந்தான்.

“ஸார்... போகிற வழியில ஸிஸ்டர் ஒங்களை பார்த்துட்டுப் போகச் சொன்னாங்க.”

“என்னவாம்?”

“சொன்னாத்தானே எனக்குத் தெரியும். அவள் சொல்லல...”

ஏதோ சலிப்போடு போகிறவன்போல் முகத்தைச் சுழித்துக்கொண்டே எழுந்தான். ஒரு வார காலம் கேம்ப்பில் இருக்கப்போகிறவன். அவள் இங்கே வந்து வழியனுப்ப வருவாள் என்று நினைத்து அவள் வராததால் எரிச்சலடைந்த அவனுக்கு அவள் அழைப்பு மாபெரும் கர்வத்தைக் கொடுத்தது. சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு புறப்படப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/140&oldid=1388290" இலிருந்து மீள்விக்கப்பட்டது