பக்கம்:இன்னொரு உரிமை.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132சு. சமுத்திரம்

போனபோது, கோபால் “ஸார்! ஒங்க பழைய நோட்ஸை தரேன்னு சொன்னிங்களே... இப்போ கிடைக்குமா?” என்றான்.

“ஒனக்கு சமயம் சந்தர்ப்பம் தெரியாது... கேம்ப்ல இருந்து வந்ததும் தாரேன்!”

“ஸாரி ஸார்! அர்ஜண்டா தேவையா இருக்கு.”

“இவன் ஒருத்தன்... எனக்கு இப்போ நேரமில்ல. ஆபீஸ் போயிட்டு ஸ்டேஷன் போகணும். இந்தா லட்சுமி... இவன் ஏதோ கேட்கிறான். எது கேட்டாலும் தேடிக்கொடு! சரி நான் வரட்டுமா?”

மனைவி மிரட்சியான பார்வையோடு பிரிவாற்ற முடியாத சோகத்தோடு வழியனுப்பி வைக்க, சேகர் சூட்கேஸோடு தெருவில் ஓடினான். ரமா அவனை எதிர்பார்த்தவள்போல வாசல் பக்கமே நின்றாள். “ஒங்கள சூட்கேஸோட பாக்கறதுக்கு ஆர்ம்ஸ்டிராங் மாதிரி இருக்கு” என்றாள்.

“வரச்சொன்னிங்களாமே...”

“ஆமாம், தில்லியில... ஒரு பஞ்சாபி பிரண்ட் இருக்காள். ஒங்களை மாதிரியே என்கிட்ட பழகுவா. குளோஸ் பிரண்ட். அவளுக்கு குங்குமச்சிமிழ் ‘பாக்’ செய்திருக்கேன். பேக்கிங்கிலே அட்ரஸ் இருக்கு. கரோல்பாக்குல சென்னா மார்க்கெட்...”

“எனக்கு பிரசண்ட் இல்லியா...”

“அய்யோ... கேட்டா வாங்குறது?”

“ஒங்களை ஒரு வாரம் பார்க்க முடியாதது போர் அடிக்கும்.”

“நீங்க சொல்லிட்டிங்க... நான் சொல்லல!”

சேகர் உணர்ச்சிவசப்பட்டு விட்டான். “ரமா, என்னை ஒன்னால பிரிந்திருக்க முடியாது. ‘ஒன்னையும்’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/141&oldid=1388302" இலிருந்து மீள்விக்கப்பட்டது