பக்கம்:இன்னொரு உரிமை.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134சு. சமுத்திரம்

சந்தர்ப்பவசத்துல தப்புச் செய்கிறவங்களை அனுதாபத்தோடு பாக்கலாம். ஆனால் அதையே நம்முடைய தப்புக்கு அங்கீகாரமாய் எடுத்தால், அந்த அனுதாபமே போலித்தனமாகிவிடும். தேவை என்கிற அளவில் செக்ஸ் ரொம்ப சாதாரணம், அதுக்கும் கற்புக்கும் சம்பந்தமில்ல ஆனால் அதை வேற வகையிலயும் பாக்கலாம். உதாரணமாய் நம் தேசக்கொடி பொறித்த துணியை ஏற்றும்போது எதுக்காக எழுந்து வணங்குகிறோம். அதை ஏன் தோளுல துண்டாவோ நாப்கீனாவோ பயன்படுத்தணும்னு தோணமாட்டேங்கறது! காரணம் துணியென்றாலும் துணியல்ல; ஒரு நாட்டோட ஆத்ம அறிகுறி. அறுபது கோடி மக்களோட சிம்பல், இதேமாதிரிதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள கற்பு. அது வெறும் செக்ஸ் கட்டுப்பாடு அல்ல. கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கிற உறவை உருவகப்படுத்தும் ஒரு சிம்பல்... இதை ஒரு அயோக்கியனால் புரிஞ்சிக்க முடியாது. ஸாரி... பார் புரூட்டலி பிராங், நானும் ஒங்களுக்கு சலனம் ஏற்படும் வகையில் நடந்தால் மன்னிங்க. இனிமேல் நீங்க தனியா வரப்படாது. அதுக்காக வராமலும் இருக்காதீங்க. ஒய்போட வாங்க. நானும் அவரோட வாரேன்! லெட் அஸ்பி பிரண்ட்ஸ்! ஓகே... காபி சாப்பிடுறீங்களா..."

சேகர் வியர்த்துப்போனது உண்மைதான் என்றாலும், வெந்துபோகவில்லை. எப்படியோ மழுப்பிவிட்டுப் புறப்பட்டான் அவனுக்கு வருத்தத்திற்குப் பதிலாகக் கோபம் வந்தது தன் ஆண்மைக்கும், கவர்ச்சித் திறனுக்கும் அவன் சவாலிடுவது போலிருந்தது. ‘என்னடி நினைச்சிக்கிட்டே... என்னோட சைக்கலாஜிகல் தாக்குதலை இனிமேல் பயன்படுத்துகிறேன் பாரு. ஒன்னால தாக்குப்பிடிக்க முடியுமான்னு பாரு. ஒரு வாரம் விசுவாமித்திரர் மாதிரி இருந்து காட்டுறேன். நீ மேனகையா வராமல் இருப்பியான்னு பாத்துடலாம்! ஒன்னைமாதிரி எத்தன பொண்ணுங்க இப்படி என்கிட்ட புலம்பி இருக்கிறாங்க! அப்புறம் பொறுத்துப் பாருடி! லெட் அஸ்பி பிரண்ட்ஸ்ன்னு சொன்ன-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/143&oldid=1388091" இலிருந்து மீள்விக்கப்பட்டது