பக்கம்:இன்னொரு உரிமை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140  சு. சமுத்திரம்


கவிஞர்களும், மாமேதைகளும் படைத்த தத்துவக்கடலை. ஓர் ஏட்டுச்சரமாய்க் கொண்ட இன்னொரு கரமும் கொண்ட சரஸ்வதி தேவி.

இசக்கியா பிள்ளை ஒவ்வொரு தெய்வப்படத்தின் முன்னாலும், ஒவ்வொரு மந்திரத்தைச் சொல்லிக்கொண்டார்.

ஓம் வக்ர துண்டாய நம:
ஓம் சரவணபவ...
ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமசிவாய நம:
ஓம் விஸ்வமாதா ஜகத்தாத்ரி...
ஓம் சரஸ்வதி தேவி நம:

சர்வரோக பாப நிவாரணி நம:

'புத்திர் பலம்' என்று சொல்லிக்கொண்டே பஞ்சமுக அனுமார்மேல் பூச்சூடப்போன இசக்கியா பிள்ளை, கைப்பூவை, ஆஞ்சநேயரின் உச்சந்தலையில் சூட்டியபடி, அந்தக் கையை எடுக்காமலே, வெளியே தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் வாக்குவாதத்தை உற்றுக் கேட்டார்.

"எத்தனை தடவ ஒனக்குச் சொல்றது... அந்தக் கம்ப்யூட்டர் சென்டர் இல்லாட்டால் இன்னொரு சென்டர். கட்டுன பணம், வீணாச்சேன்னு அப்பாவோ நானோ வருத்தப்படுறோமா?"

"ஒங்களுக்கு எப்படிக் கட்டுன பணம் வீணான திலே வருத்தம் இல்லியோ, அப்படி அந்தப் பிரின்ஸ்பால் பயல் என் கையைப் பிடிச்சு இழுத்ததுலயும் வருத்தமில்லை இல்லியா?"

"துஷ்டனைக் கண்டால் தூர விவகித்தான் ஆகணும். காலம் கலிகாலம்."

"அப்போ இனிமேல் கலியுக வரதான்னு ஆகாயத்தைப் பார்த்துப் பேசாதீங்க!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/149&oldid=1369266" இலிருந்து மீள்விக்கப்பட்டது